Tamil Wealth

அதிகமாக அருந்தும் குளிர்பானங்கள் நல்லதா?

அதிகமாக அருந்தும் குளிர்பானங்கள் நல்லதா?

இன்றைய குளிர்பானங்கள் சிலவகைகள் பொடிகளை கொண்டு தயாரிக்க படுகின்றன. என்றாவது ஒரு நாள் குடிக்கலாம் ஆனால் தினம் அருந்தும் பழக்கத்தை எடுத்து கொள்ள வேண்டாம். இது சில உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

கொழுப்பை சேர்க்கும் :

பொதுவாக அனைத்து குளிர்பானங்களிலும் கலக்க படும் சர்க்கரையின் அளவு நம் உடலில் அதிகம் சேருவதால் ரத்தத்தில் கொழுப்பின் அளவை கூட்டும்.
எடையை அதிகரிக்கும் :

இதில் இருக்கும் சர்க்கரை உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை அதிகரித்து உடல் எடையை விரைவில் அதிகரித்து ஆரோக்கியமற்ற வாழ்வை கொடுக்கும். ஆகையால் அதிகம் அருந்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

ஈறுகளை பாதிக்கும் :

குளிர்பானங்கள் என்றாலே அது அதிக குளிர்ச்சியை கொண்டு இருக்கும் அதனை அப்படியே அருந்த பற்களில் பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் ஈறுகள் வலுவிழக்கும் மற்றும் சர்க்கரை அளவு பற்களை சொத்தை ஆக்கும். பற்களை சுற்றி புண்களை உருவாகும் அபாயம் உள்ளது.

குளிர்பானங்களை தவிர்க்கலாம் :

குளிர்பானங்களால் ஏற்படும் மேற்கூறிய அனைத்து கோளாறுகளையும் தவிர்த்து இயற்கையில் உருவாகும் நீர் அல்லது இளநீர், பழ ஜூஸ் செய்து தினம் அருந்த நல்ல பலனையும் கொடுத்து ஆரோக்கியத்தையும் தரும்.

Share this story