பாத வெடிப்புகளுக்கு தீர்வு இருக்கிறதா?

எதையும் பயன்படுத்தாமல் செய்ய வேண்டும் என்று எண்ணினால் கால்களை கொண்டு கரடு முரடான தரையில் வைத்து தினமும் தேய்க்க தேய்க்க வெடிப்புகளும் அகலும், பாதத்தில் உள்ள அழுக்குகளும் சென்று விடும்.
மஞ்சள் அனைவருக்கும் தெரிந்ததே அதையும் தினம் பாதத்தில் தேய்த்து வர அது வெடிப்புகளை மறைய செய்து அழகான தோற்றத்தை தர கூடியது.
தேங்காய் எண்ணெய்யையும் பயன்படுத்தலாம், மஞ்சளுடன் சேர்த்து பாதத்தில் தடவி வர வெடிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.
வெளியே செல்லும் போதும் சரி, எங்கு சென்றாலும் காலணி அணிந்தே செல்ல பழகுங்கள், இல்லையென்றால் வெடிப்புகள் அதிகமாகி விடும்.
நம் வீட்டில் உள்ள கழுவு நீர் காலில் பட்டாலே அது பாதத்தில் வெடிப்புகளை உண்டாக்க கூடியதே .
கைகளுக்கு மருதாணி இடுவதை போன்றே கால்களுக்கும் இடுவதால் கால்களில் வரக்கூடிய வெடிப்புகள் மற்றும் சொர சொரப்பு தன்மை இருக்காது.
தயிரை வெடிப்பு இருக்கும் இடத்தில் தினமும் பயன்படுத்தி வர வெடிப்புகள் நாளடைவில் மறைந்தே போகும்.