காலி மனையை வாங்கும் போது பாம்பு புற்று உள்ளதா?
Feb 11, 2018, 13:06 IST

காலி மனையில் பாம்பு புற்று இருந்தால் என்ன செய்ய வேண்டும்:-
காலி மனை வாங்கி வீடு கட்ட வேண்டும் என்று நீங்கள் நினைத்து இருப்பீர்கள். ஆனால் காலி மனை வாங்க சென்ற இடத்தில் காலி மனையில் பாம்பு புற்று இருந்தால் அந்த மனையை வாங்குவதா இல்லையா என்ற தயக்கம் உங்களிடம் இருக்கும்.
அப்படி இருக்கும் இடத்தை வாங்குவதற்கு தயங்கவே வேண்டாம். முறைப்படி அந்த புற்றை இருக்கும் இடத்தை சுற்றி இனிப்பு கலந்த பால் ஊற்ற வேண்டும். மறு நாள் உடைந்த அரிசி, மஞ்சள், நாட்டு சர்க்கரை போன்றவற்றை சுற்றி தெளிக்க வேண்டும்.
இரண்டு நாள்கள் கழித்து பாம்பாட்டியை அழைத்து வந்து பாம்புகளை பிடித்து செல்ல வேண்டும். அதன் பின்னர் காலி மனையில் வீடை கட்டலாம். இதனால் எந்த தோஷமும் ஏற்படாது.