உடல் பருமன் அதிகரித்து கொண்டே இருக்கிறதா? கவலையே வேண்டாம்!

உடல் பருமன் அதிகரித்து கொண்டே இருக்கிறதா? கவலையே வேண்டாம்!

மாறி வரும் கால நிலைக்கு ஏற்ப மனிதனின் வேலைப்பளு குறைந்து கொண்டே வருகிறது. ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதால் உடல் பருமன் எளிதில் அதிகரித்துவிடுகிறது. உடல் பருமனை குறைக்க உதவும் சில எளிய வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.

உடல் பருமனை குறைக்க உதவும் வழிமுறைகள்:-

  • வெறும் வயிற்றில் முட்டைக் கோஸ் ஜூஸை குடித்தால் நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராகி நோய்க்கிருமிகளின் தாக்கம் குறைக்கிறது. மேலும் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம்.
  • வெங்காயத்தை தோலுடன் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்கள் உடல் எடையை குறைக்கவும் முடியும்.
  • .உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் சோடா அல்லது குளிர்பானங்களை குடித்தால் அதில் உள்ள செயற்கை இனிப்பூட்டிகள் உடலில் அதிகப்படியான கொழுப்பை சேர்க்கிறது.
  • கற்றாழை சாறுடன் பூண்டு சாறு கலந்து தினமும் இதை குடித்து வந்தால் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். இதனால் உடல் பருமன் அதிகரிக்காமல் பார்த்து கொள்ள முடியும்.

Share this story