உடல் பருமன் ஆரோக்கியமா இல்லையா ?

சிலர் தங்கள் உடல் பருமனை நினைத்து மிகவும் கவலைக்கு உள்ளாகுகிறார்கள். இதனால் மிகுந்த மன வேதனையும் அடைகிறார்கள். அதிக பருமன் உடலில் ஏதேனும் உபாதைகளை ஏற்படுத்தி விடும் என்று அஞ்சுவார்கள், ஆனால் சீரான உடல் எடையை கண்டு அஞ்ச வேண்டாம் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
உடல் எடையை குறைக்க செய்யும் டயட் :
உடல் பருமனை குறைக்க வேண்டும் என்று நினைத்து டயட் மேற்கொண்டு, உணவு பழக்கத்திலும் கட்டுக்குகளை கொண்டு வருகிறார்கள். அவர்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் உடல் எடையை குறைக்க உதவும், ஆனால் அவர்களின் உடல் உறுதிக்கும் ஆரோக்கியமான வாழ்வையும் பெற முடிவதில்லை.
இதையே கொஞ்சம் உடல் பருமனை கொண்டவர்கள் உடற்பயிற்சி செய்யாமல் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உட்கொண்டு வந்தால், அவர்களுக்கு உடை எடை கூடாது சீராக அமையும், அதோடு அவர்கள் மிகவும் ஆரோக்கியத்துடன் காண படுவதால் எந்த ஒரு செயலையும் திறம்பட செய்வார்கள்.
வயதான பிறகு ஏற்படும் உடல் சோர்வையும் உடல் எடையையும் குறைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். உடலை அழகான தோற்றத்துடன் வைத்து கொள்ள வேண்டும் என்று எண்ணுபவர்கள் தங்கள் ஆரோக்கியத்தையும் அழகு படுத்த வேண்டும் என்று எண்ணுவதில்லை. அவர்கள் எண்ணம் தங்கள் எடையை குறைப்பதில் மட்டுமே இருக்கும். இதனால் டயட் மேற்கொண்டு தங்கள் உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்களை கொடுக்க மறக்கிறார்கள்.
இதுவே உடல் ஆரோக்கியம் முக்கியம் என்று எண்ணுபவர்கள் தங்கள் எடையை கவனத்தில் கொள்ளாமல் உண்ணும் உணவுகளில் ஆரோக்யமந்தை மட்டுமே எடுத்து கொள்ளலாம், இது உங்கள் எடையை குறைக்காது ஆனால் சீராக வைத்து கொள்ளும் மற்றும் எந்த வேலையையும் அதிக ஆற்றலுடன் செய்து முடிப்பீர்கள்.
ஒல்லியான தோற்றத்தையே அனைவரும் விரும்புகிறார்கள். அதற்காக உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்களை இழக்க வேண்டாம், உடல் பருமனை விட நல்ல ஆரோக்கியமும் திறம்பட செயல் படும் திறனும் தான் மிக அவசியம்.