வெறும் வயிற்றில் காலையில் நெய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
Apr 23, 2018, 11:09 IST

அதிகாலை எழுந்ததும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அதில் குறிப்பாக சொன்னால் காலையில் எழுந்ததும் டீ, காபி குடிப்பது அல்லது தண்ணீர் குடிப்பது அல்லது வெந்நீரில் தேன் கலந்து குடிப்பது போன்றவற்றை சொல்லலாம். அந்த பழக்கத்தை விட இந்த பழக்கத்தை பின்பற்றினால் நமக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.
வெறும் வயிற்றில் காலையில் நெய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்:-
- வெறும் வயிற்றில் நெய்யை சாப்பிடும் போது உடலில் உள்ள எல்லா செல்களுக்கும் ஊட்டமளித்து ஒரே சீராக இயங்கும். இதனால் செல்கள் புத்துணர்ச்சியாக இருக்கும்.
- சரும செல்களை புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவக் கூடிய பொருள் நெய்யிற்கு உண்டு. இதனால் சருமம் பொலிவாக மாறும். சருமத்தில் ஏற்படக் கூடிய சொரியாசிஸ் பிரச்சனைகளையும் குணமாக்கும்.
- மூட்டு இணைப்புகள் மற்றும் திசுக்களில் ஏற்படும் தேய்மானத்தை சரி செய்கிறது. இதனால் மூட்டு வலி மற்றும் ஆர்திரிடிஸ் மூட்டு வலி வராமல் தடுக்கிறது.
- நம்மில் பெரும்பாலும் நெய் சாப்பிட்டால் உடல் பருமன் அதிகரிக்கும் என்றே நினைப்பார்கள். ஆனால் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் உடலில் உள்ள மெட்டபாலிசம் குறைந்து உடல் எடை குறையும்.
- தலைமுடி மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற ஊட்டச்சத்துகளை இது கொண்டுள்ளது. மேலும் இதில் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றலும் கொண்டது.