Tamil Wealth

தொலைக்காட்சியை அதிகம் பார்ப்பது தீமையா?

தொலைக்காட்சியை அதிகம் பார்ப்பது தீமையா?

தொலைக்காட்சியை பார்ப்பதுதான் இன்றைய பொழுது போக்காக அமைகிறது. அதோடு அதில் வரும் காட்சிகளே நமக்கு நிறைய சொல்லிக்கொடுக்கின்றன. இத்தகைய தொலைக்காட்சியை நாம் அதிகம் பார்க்கலாமா கூடாதா என்பதை பற்றித்தான் பார்க்க போகிறோம்.

தொலைக்காட்சி பற்றி பார்க்கலாம்!

தொலைக்காட்சி பார்க்கும் பொழுது ஒரு இடத்தை விட்டு நகராமல் உட்காந்த இடத்திலே இருக்கிறோம். அது நம் வயிற்றில் இருக்கும் தசைகளை வலுவிழக்க செய்து தொப்பையை ஏற்படுத்தும் என்பது யாருக்கும் தெரிவதே இல்லை.

நம் அன்றாட வாழ்வில் மிக முக்கியமான ஒன்றே அளவான தூக்கம். ஆனால் இன்றைய சிறுவர்களோ அல்லது இரவு வேலை பார்பவர்களோ தொலைக்காட்சியில் தான் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு இரவு தூக்கம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறது.
இதனை சரி செய்ய வேண்டும் அல்லவா, அதற்கு அவர்கள் நேரத்தை சரியான விதத்தில் செலவழிக்க வேண்டும். குழந்தைகள் இரவில் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். அவர்களின் வயதிற்கு ஏற்ற தூக்கம் வேண்டும். தூக்கமின்மையால் காலை எழுவது சிரமத்திற்கு உள்ளாகும் இதனால் உடல் எடை அதிகரிக்கும், தேவை இல்லாத கொழுப்புகள் உடலில் சேரும். தொலைக்காட்சியில் இருக்கும் அனைத்து காட்சிகளும் நம்மை அதிகம் ஈர்க்கும் வண்ணமே இருக்கும். அதனை இரவு நேரத்தில் தான் பார்க்க வேண்டும் என்று இல்லை பகலில் பார்க்கலாம். அதற்காக பகலில் நெடு நேரம் பார்க்கலாம் என்று நினைக்க கூடாது. அளவான முறையில் பார்ப்பதே நல்லது. நம் கண்களில் குறைபாடுகளை ஏற்படுத்தும் அதில் இருந்து வெளிப்படும் வெளிச்சத்தினால். இரவு நேரங்களில் மின்விளக்கு இல்லாமல் பார்ப்பதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

 

மேற்கூறியவைகளை கடைபிடித்தால் ஆரோக்கியத்திற்கும், கண்களுக்கும் நல்லது. சோர்வை காண மாட்டீர்கள். தொலைக்காட்சியை தூரத்தில் இருந்தே பார்ப்பது நல்லது, அருகில் சென்று பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

Share this story