முடி உதிர்வுக்கு இதுவும் ஒரு காரணமா?

முடி உதிர்வு நாம் செய்யும் செயல்களில், முடிகளை சரியாக பராமரிக்காமல் இருப்பது, எண்ணெய் தேய்க்காமல் இருப்பது, அதிக வேதி பொருட்கள் இருக்கும் ஷாம்பு உபயோகிப்பது போன்றவை போலவே தலைக்கவசம் அணிவதாலும் முடி உதிர்வு பிரச்சனைகள் வரும் என்று தெரியுமா உங்களுக்கு, தெரிஞ்சிக்கோங்க!
தலைக்கவசத்தை பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பயன்படுத்துவதால் அவர்களே அதிகம் பாதிக்க படுகிறார்கள்.
எப்படியெல்லாம் பாதிக்கிறது :
தலைக்கவசத்தை அணிவதால் தலைக்கு தேவையான காற்று அதாவது ஆக்ஸிஜன் கிடைப்பது இல்லை. வியர்வை உருவாகி முடிகளின் வேர் நுனிகளை பாதிக்கும்
தலை முடி :
தலை முடிகளை அழகு படுத்துகிறோம் என்று இறுக்கமான முறையில் தலையை பின்னுவது, ஹேர் ஸ்டைல் போடுவது போன்றவையும் வேர் நுனிகளை பாதித்து முடி உதிர்வை ஏற்படுத்தும்.
தலை முடிகளை கையாளுவதில் மிகவும் கவனம் தேவை. அதிகமான அழுத்ததால் முடிகள் உடையும் பொது வலிகள் ஏற்பட்டும் விரைவில் முடிகளில் வேர் நுனிகள் வலுவிழந்து விடும்.
தலை கவசம் :
தலைக்கவசத்தை அணியும் பொழுது நன்கு சுத்தம் செய்த பின்னரே அணியுங்கள். நீங்கள் உபயோகிக்க உபயோகிக்க அதில் வியர்வையின் மூலம் வெளியேறும் கிருமிகள் தங்கி விடும். ஆகையால் அடிக்கடி சுத்தம் செய்து கொள்ளுங்கள். இதனால் உங்கள் முடிகளை அதிகம் பாதிக்காது.
அனைவருக்கும் இப்பொழுது இருக்கும் பழக்கம் தலைக்கவசத்தை அணிவதற்கு முன்னர் ஏதேனும் துணியை கொண்டு தலையில் கட்டிக்கொண்டு அதன் பின்னர் தலைக்கவசத்தை அணிந்து கொள்கிறார்கள்.
முடிகளின் வளர்ச்சிக்கு ஆக்ஸிஜன் என்பது காற்றில் இருந்து எடுக்காது, நமது ரத்தத்தில் இருந்தே எடுத்து கொள்ளும். ஆகவே தலைக்கவசத்தை பயன்படுத்துங்கள் அதற்கு முன்னர் தலையை துணியை கொண்டு கட்டி கொள்ளுங்கள்.