சருமத்திற்கு பயன் உள்ளதா வெந்தயம்?
Sep 12, 2017, 11:45 IST

- சூரியனின் வெப்பத்தினால் முகத்தில் ஏற்படும் அனைத்து கோளாறுகளுக்கும் வெந்தயத்தை நன்கு நீரில் ஊர வைத்து பின் அதனை நன்கு அரைத்து கெட்டியான பதத்திற்கு கொண்டு வந்து முகத்தில் தினம் பயன்படுத்த சருமத்திற்கு நல்ல பலனை கொடுக்கும். சருமத்தில் ஏற்படும் அரிப்புகளுக்கு கடலை மாவு, மஞ்சள் கலந்து வெந்தயத்துடன் சேர்த்து முகத்திற்கு பயன்படுத்த கொஞ்சம் கொஞ்சமாக அரிப்புகள் குறைந்து அதனால் முகத்தில் ஏற்படும் தழும்புகளும் குண ஆகும்.
- முகத்தில் உருவாகும் பருக்கள், இறந்த செல்களை நீக்குதல், துளைகள் போன்றவற்றிக்கு வெந்தயத்தை அரைத்து அதனுடன் தேன் அல்லது தயிர், பால் கலந்து உபயோகியுங்கள்.
- முகத்தில் சேரும் அழுக்குகள் நீங்க வெந்தய பசையுடன் பாலாடையின் கட்டிகளை சேர்த்து நன்கு குழைத்து முகத்திற்கு பூச வேண்டும்.
- வெந்தயத்தை நன்கு கொதிக்க விட்டு பின் அதன் நீரினை குடிப்பதன் மூலமும், சருமத்திற்கு பயன்படுத்தல் மூலமும் நமக்கு நன்மையே.
- வெந்தயம் முகத்திற்கு பயன்டுத்திய பின்னர் நீரினால் முகத்தினை கழுவ வேண்டும். அதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கொள்ளலாம்.