நோய்களை தீர்க்க இலந்தை பழம் உதுவுமா?

இலந்தை பழத்தை இன்று காணவே முடிவது இல்லை. அதில் இருந்து கிடைக்கும் உடல் ஆரோக்கியத்தை தெரிந்து கொண்டு, அதனை உண்ண ஆரம்பியுங்கள்.
இலந்தை பழம் :
உடலில் அடிக்கடி ஏற்படும் மூட்டு வலி, கை, கால்களில் ஏற்படும் வலி, தசை பிடிப்புகள், எலும்புகளில் ஏற்படும் வலிகளை போக்க முதலில் இலந்தை பழத்தை சாப்பிடுங்கள். சாப்பிட்டு பயன் அடையுங்கள்.
ஞாபக திறன் :
மூளையில் ஏற்படும் சோர்வை போக்கவும் மற்றும் சுவாச உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகளை குண படுத்தவும் உதவுகிறது. இரவு தூக்கம் இன்று அவதி படுவோர் இலந்தை பழத்தை சாப்பிட நல்ல ஆழ்ந்த உறக்கத்தை பெறலாம் மற்றும் மன அழுத்தங்களை நீக்கி, நல்ல மன நிலையை தரும்.
செரிமானம் :
அஜீரண கோளாறு பெரிய கோளறுங்க. இதனை சரி செய்ய இலந்தை பழத்தின் விதைகளை நீக்கி, சதை பற்றை மட்டும் எடுத்து, விரும்பினால் தோல்களை நீக்கி கொள்ளலாம். இதனுடன் சுவைக்கு உப்பு, காரத்திற்கு மிளகாய் பொடியை கலந்து உண்ண செரிமான பிரச்சனைகள் தீரும், அதனால் ஏற்படும் வயிற்று கோளாறுகளும் தடுக்கப்படும்.
வாந்தி :
ஒவ்வாமை தொல்லையால் ஏற்படும் வாந்தி, பித்த கோளாறுகள், தலை சுத்தல் ஏற்படுவதால் மயக்கமான நிலையை உணருவார்கள். இதற்கு உகந்த தீர்வு இலந்தை பழத்தை சாப்பிடலாம்.
கால்சியம் :
எலும்புகளுக்கும் மற்றும் பற்களுக்கும் உறுதியை கொடுக்க உதவும் கால்சியம் சத்துக்களை கொண்டுள்ள இலந்தை பழத்தை சாப்பிட நல்லதே. எலும்புகளில் ஏற்படும் வலிகளையும் போக்க உதவுகிறது.
பசியில்லையா ?
பசியின்மையால் அவதி படுவோர் தினம் ஒரு இலந்தை பழத்தை உண்ண நன்கு பசி எடுக்கும்.