ஆப்பிளில் இவ்வளவு நன்மையா? இதனால் தான் மருத்துவரிடம் செல்ல அவசியம் இல்லையோ!
Sat, 5 May 2018

தினம் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிட்டால் மருத்துவரை பார்க்க தேவை இல்லை அது மட்டுமில்லாமல் எல்லா விதமான நோயிலிருந்தும் நம்மை பாதுகாக்கலாம் என்பது அனைவரும் அறிந்த ஒரு உண்மை. ஆப்பிள் மட்டுமில்லை அதை பதப்படுத்தி அதிலிருந்து பெறப்படும் வினிகரும் பல்வேறு நன்மைகளை தருகிறது. அதன் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.
- ஒரு சிலருக்கு உடலில் ஏற்படும் அதிகப்படியான அலர்ஜியை குறைக்க உதவும். இதற்கு காரணம் க்வெர்செடின் என்ற பொருள் தான் காரணம்.
- பச்சை நிற ஆப்பிளை துண்டாக்கி அதன் மணத்தை நுகர்வதால் அதிகப்படியான தலைவலி குணமாகும்.
- ஆப்பிள் பழத்தினை துண்டாக்கி சாப்பிடாமல் கடித்து சாப்பிடுவதால் பல் சம்மந்தமான பிரச்சனைகளை வராமல் தடுக்கலாம்.
- வயதானவர்களுக்கு ஏற்படும் முழங்கால் மற்றும் மூட்டுவலியை சரி செய்து குணப்படுத்தும்.
- மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகள் காயாக இருந்தால் அதை பழுக்க வைக்க ஆப்பிளை அந்த காய்களோடு சேர்த்து வைத்தால் ஒரே நாளில் பழுக்க வைக்க முடியும். இதனால் எந்தவிதமான பக்கவிளைவுக் கிடையாது.
- ஆப்பிள் சைடர் வினிகரை நீரில் கலந்து தலைமுடியை அலசினால் தலைமுடியில் உள்ள இரசாயனங்கள் நீங்கும். இதன் காரணமாக தலைமுடி நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.