Tamil Wealth

இரவு நேரத்தில் எந்த மாதிரியான உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும்?

இரவு நேரத்தில் எந்த மாதிரியான உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும்?

பொதுவாக இரவு நேரத்தில் சாப்பிட்ட உடனே நாம் தூங்கக்கூடாது என்பதுதான் நமக்குத் தெரியும். ஆனால் இரவு நேரத்தில் எந்தமாதிரியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது நமக்குத் தெரியவில்லை. இதனால் நாம் பலவிதமான உடல் ரீதியான அபாயங்களை சந்திக்க நேரிடும்.

அதாவது நாம் ஒரு பழமொழியினை கிராமப் புறங்களில் கூறக் கேட்டு இருப்போம். "காலையில் ராஜாவை போல உண்ண வேண்டும். மதியம் இளவரசனை போல சாப்பிட வேண்டும். இரவு பிச்சைக்காரனை போல சாப்பிட வேண்டும்." என்பதுதான் அந்தப் பழமொழி.

இது பலருக்கும் தெரிந்த விஷயமே ஆகும், அதாவது இரவு நேரத்தில் உணவினை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அசைவ உணவுகளை இரவு நேரங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. அவை செரிமானம் அடைவது கடினமானது.

அதேபோல் கீரை வகைகள், தயிர் போன்றவற்றினையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும் பரோட்டா போன்ற கடினமான உணவுப் பொருட்களை பகல் நேரங்களில் சாப்பிடுவதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

மேலும் எண்ணெயில் பொரித்த பலகாரங்களையும், இனிப்பு வகைகளையும் முடிந்த அளவு தவிர்த்தல் நல்லது.  மேலும் தூங்கப் போகும் முன்னர் வாழைப்பழம் எடுத்துக் கொள்வது நல்லது. மேலும் சாப்பிட்ட உடனே தூங்காமல், சிறிய அளவிலான நடைப்பயிற்சியினை செய்தல் வேண்டும்.

Share this story