Tamil Wealth

பாதத்தில் உண்டாகும் வெடிப்புகளை சரி செய்யும் வழிமுறைகள்!

பாதத்தில் உண்டாகும் வெடிப்புகளை சரி செய்யும் வழிமுறைகள்!

நம் கால்களில் உண்டாகும் வெடிப்புகளால் காலின் தோற்றமே அசிங்கமாக தெரியும். இதனை மறைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். கால்களின் பராமரிப்பு மிகவும் முக்கியமானதே. நம் பாதம் இருக்கும் நிலையை பொறுத்தே நாம் நடக்கும் செயலில் இருக்கிறது.

வெடிப்புகளை மறைய செய்ய உதவும் பொருட்கள் :

பாதத்தில் உண்டாகும் வெடிப்புகளை சிறு வயதிலே வராமல் தடுக்க நினைத்தால் கால்களை கொஞ்சம் கரடு முரடான தரையில் வைத்து தேய்க்க வேண்டும் அல்லது கால்களில் மஞ்சளை தினம் பூசி வர நல்ல பலனை கொடுக்கும்.

கால்களை சூடான வெந்நீரில் சிறிது நேரங்கள் வைத்து பின் மசாஜ் செய்வதன் மூலமும் பாதத்தில் வெடிப்புகள் அல்லது பிளவுகள் உண்டாகும், சில நேரங்களில் ரத்த கசிவுகள் போன்றவற்றில் இருந்து நம்மை பராமரிக்கிறது சூடான நீரால் காலில் இருக்கும் கிருமிகள் அனைத்தும் அழிந்து நோய் தொற்றுகளிடம் இருந்து பாதுகாக்கிறது.

பால் மற்றும் தேனை கலந்து ஒரு பாத்திரத்தில் வைத்து கால்களை அதனுள் சில நிமிடங்கள் வைத்து பின் கால்களை அலச வேண்டும். இது பாத வெடிப்புகளை தடுக்கும் மற்றும் கால்களில் இருக்கும் நுண்கிருமிகளையும் வெளியேற்றும்.

சந்தனத்தை கொண்டு காலில் வெடிப்புகள் இருக்கும் இடங்களில் பயன்படுத்த விரைவில் வெடிப்புகள் மறையும் சருமம் பழைய நிலையாகு திரும்பும்.

Share this story