குற்றம் செய்து சிறை சென்ற இந்திய அரசியல்வாதிகள் !

குற்றம் செய்து சிறை சென்ற இந்திய அரசியல்வாதிகள் !

அரசியல்வாதிகள் பெயர்களை கேட்டாலே ஊழல் என்ற சொல் தான் ஞாபகம் வரும். அரசியலில் தனக்கு உள்ள பதவியை பயன்படுத்தி ஊழல், மற்றும் சமுகத்திற்கு தீங்கு விளைவித்து சிறை சென்ற சிலரை இப்போது பார்க்கலாம்.

குற்றம் செய்து சிறை சென்றவர்கள் இந்திய அரசியல்வாதிகள்:-

  • ஜெயலலிதா:- அதிமுகவின் தலைவரான இவருக்கு 4 ஆண்டு சிறை, 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இவர் இறந்த காரணத்தால் வழக்கில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் பல நன்மைகளை தமிழக மக்களுக்கு செய்துள்ளார்.
  • சசிகலா:- அதிமுக வை சேர்ந்த இவருக்கு 4 ஆண்டு சிறையும் 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
  • அமித்ஷா:- பாஜக வை சேர்ந்த இவர் கொலை, ஊழல் போன்றவற்றால் சிறை சென்றார். 3 மாதத்தில் ஜாமீனில் வெளியே வந்தாலும் குஜராத் மாநிலத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
  • லாலு பிரசாத் யாதவ்:- கால்நடை தீவண முறைகேட்டுக்காக 5 வருட சிறையும் 25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் ஜாமினில் வெளிவந்துள்ளார்.
  • மஹிபால்:- காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்டவர். பன்வாரி தேவி கொலை வழக்கு, கடத்தல் போன்றவற்றால் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
  • கனிமொழி:- தி.மு.க வை சேர்ந்த இவர் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக 6 மாத தண்டனைக்கு பிறகு ஜாமினில் வெளிவந்தார்.
  • சுரேஷ் கல்மாடி காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்டவர். 2010 ல் காமன்வெல்த் போட்டியில் 70000 கோடி ஊழல் காரணமாக 10 மாதம் கழித்து ஜாமினில் வெளிவந்துள்ளார்.
  • ஆ. இராசா தி.மு.க வை சேர்ந்தவர். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் 15 மாதம் திகார் சிறையில் இருந்தார்.
  • பா.ஜ.க வை சேர்ந்த எடியூரப்பா சுரங்க தொழில், நில் மோசடி காரணமாக ஒரு மாதம் சிறையில் இருந்தார். பின்னர் ஜாமினில் வெளியே வந்துவிட்டார்.
  • சுக் ராம்:- இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். டெலிஹாம் விநியோகம் முறைகேடுகள், சொத்து குவிப்பு வழக்குகளில் மொத்தம் 8 ஆண்டுகள் சிறை தண்டணை அனுபவித்தார்.

Share this story