இரத்தத்தில் உள்ள சிகப்பணு மற்றும் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வழிமுறைகள்!
Nov 6, 2017, 08:54 IST

இரத்தத்தில் உள்ள சிகப்பணு மற்றும் வெள்ளையணுக்கள் உடலில் ஏற்படும் காயங்கள் மற்றும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வழிவகுக்கிறது. இவற்றின் எண்ணிக்கை இரத்தத்தில் சரியான அளவில் எப்போதும் இருத்தல் அவசியம். இதை சரியான அளவில் வைத்திருக்க உதவும் உணவுகளை பற்றி இப்போது பார்க்கலாம்.
- வைட்டமின் – சி நிறைந்த உணவுகளான ஆரஞ்சு, கீரை, பந்து மிளகுத்தூள் இவற்றில் அதிகப்படியான வைட்டமின் – சி சத்து அடங்கியுள்ளது. இவை இரத்த தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.
- கொழுப்புகள் மற்றும் ஒமேகா – 3 நிறைந்த உணவு பொருள்கள் இரத்த தட்டணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. அவற்றில் குறிப்பாக ஆளி விதைகள், அக்ரூட் பருப்புகள், மீன், கீரைகள் போன்றவை அடங்கும்.
- பச்சை காய்கறிகள் மற்றும் முழு தானியங்களான பீன்ஸ் போன்ற உணவில் உள்ள அதிகப்படியான ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது.
- வைட்டமின் – ஏ நிறைந்த உணவுகளான பூசணிக்காய், கேரட், உருளைக் கிழங்கு போன்ற உணவை சாப்பிடுவதன் மூலம் இரத்த தட்டணுக்களின் எண்ணிக்கைய குறையாமல் பார்த்து கொள்ள முடியும்.
- இந்த முறையானது மிகவும் எளிய முறையாகும். அது என்னவெனில் தினம் ஐந்து பேரீட்சைப் பழம் சாப்பிட்டால் போதும். இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறையாமல் இருக்கும்.