மூளையின் செயல் திறனை அதிகரிக்க வேண்டும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும்!!!!

நமது உடலை சுறு சுறுப்புடன் செயல் பட செய்வதே மூளைதான். அதை நாம் பராமரிப்பது மிக முக்கியமே. நாம் செய்யும் ஒவ்வொரு வேலையும் நமக்கு ஞாபக படுத்தும் நமது மூளையை ஆரோக்கியமாக வைக்க வேண்டும் அல்லவா.
சிறந்த யோசனைகள்:
சில பேருக்கு சூடான நீர் ஆகாரம் அருந்தினால் தான் காலை ஒரு சுறு சுறுப்பு கிடைக்கும். இப்படி பழக்கம் கொண்டவர்களுக்கும் காப்பி அல்லது டீ குடிக்காமல் இருக்க முடியாது. அதில் இருக்கும் கெஃபீன் நல்ல ஞாபக திறனை கொடுக்கும் ஆற்றல் கொண்டது.
முன்பெல்லாம் தவறு செய்தால் தோப்புக்கரணம் போட சொல்வார்கள் அப்பொழுது இரு கைகளாலும் தலையில் குத்துவதால் மூளைக்கு நல்ல செயல் பாடை கொடுக்கும். இப்பொழுது யாரும் அப்படி செய்வதே இல்லை.
காலையில் சீக்கிரமே எழுந்து உடற்பயிற்சி மேற்கொண்டு பின் நம் இரு கண்களையும் நன்கு உருட்டி பார்ப்பதன் மூலம் மூளைக்கு நல்ல சக்தியை கொடுக்கும் கண்களுக்கும் நல்லது.
அன்றாட உடற்பயிற்சி செய்யுங்கள் உங்கள் மூளை புத்துணர்ச்சி பெற்று வேலையும் சிறப்பாக நடை பெறும். அதிகமான உணவு பழக்கங்களும் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் மறவாதீர்கள்.