Tamil Wealth

உணவில் முட்டைகளை அதிகம் சேர்த்து கொள்ளலாமா?

உணவில் முட்டைகளை அதிகம் சேர்த்து கொள்ளலாமா?

நாம் உணவில் அதிகம் சேர்த்து கொள்ளும் முட்டைகள் நமக்கு சத்துக்களை கொடுக்கும்.முட்டைகளில் இருக்கும் புரதம், புரோடீன்கள் நமக்கு ஆரோக்கியத்தை கொடுக்கின்றன. முட்டைகளிலும் சிறந்ததது நாட்டு கோழி முட்டைகள் தான்.

கோழி முட்டை :

கோழி முட்டையில் இருக்கும் புரோடீன்கள் நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும் மற்றும் வெள்ளை கரு அதிகப்படியான கொழுப்புகள் சேருவதை கட்டு படுத்தும். உடல் எடையை குறைக்க விரும்புவோர் தினம் முட்டையின் வெள்ளை கருவை சாப்பிடலாம். மஞ்சள் கருவிலும் சத்துக்கள் அதிகமே, உடலில் கொழுப்புகள் சேரும்.

  • நாட்டு கோழி முட்டைகளில் இருக்கும் சத்துக்கள் நமக்கு அதிக அளவில் ஆரோக்கியத்தை கொடுக்கும் ஆற்றல் கொண்டது. முட்டைகள் சாப்பிடலாம், அதையும் வேக வைத்து சாப்பிடுவதே நல்லது, அப்பொழுதுதான் அதில் இருக்கும் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும், ஆம்ப்லேட்,ஆஃஆயில் செய்து சாப்பிடுவதால் சத்துக்கள் அனைத்தும் எண்ணெயில் சென்று விடும்.

மற்ற பறவைகளின் முட்டைகளிலும் ஆரோக்கியம் இருக்கிறது. காடை, வாத்து போன்ற பறவைகளின் முட்டைகளையும் வேக வைத்து சாப்பிட உடலுக்கு போஷாக்கை கொடுக்கிறது. வைட்டமின்கள், புரோடீன்கள் அதிகம் அடங்கி இருப்பதால் தினம் ஒரு முட்டை சாப்பிடலாம்.

மீன்கள் இடும் முட்டைகளில் அதிக ஊட்ட சத்துக்கள் இருப்பதால் நமது ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் இருக்கும் ஆரோக்கியம் நமது அன்றாட செயல்களில் மிக முக்கியமானது. முட்டைகளை எண்ணெயில் பொரித்து உண்ணுவதை தவிர்த்து விடுங்கள், வேக வைத்து உண்பது நல்லது, ஆரோக்கியமும் கூட.

Share this story