ஐஸ் கட்டிகள் குளிர்ச்சியை தருவது போலவே நன்மையும் தரும்!!

குளிர்ச்சி மிகுந்த ஐஸ் கட்டிகளை குளிர்பானங்களுக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். நம் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கும் பயன்படுத்தலாம். உடலில் இருக்கும் வீக்கங்களை, குறிப்பாக குழந்தைகளுக்கு போடும் தடுப்பூசிகளின் வீக்கத்தை குறைக்க ஐஸ் கட்டியை கொண்டு ஒத்தடம் கொடுக்க வீக்கம் விரைவில் குறையும். ரத்த கட்டிய இடங்களிலும் ஐஸ் பயன்படுத்தலாம். கோடைகாலங்களில் தாகத்தை தீர்க்கும் வகையில் பெரும்பாலும் பயன்படுவதே ஐஸ் கட்டிகள் தான்.
ஐஸ் கட்டிகளை முகத்தில் பரு இருக்கும் இடங்களில் வைத்து வைத்து எடுக்க பருக்கள் மற்றும் சுருக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைவதை காணலாம்.
ரோஸ் வாட்டரும் சேர்த்து முகத்தில் பயன்படுத்த முகம் மற்றும் உதடுகள் நல்ல சிவப்பழகை பெறும். இதனுடன் கடலை மாவையும் சேர்த்து கொள்ளலாம்.
முகத்திட்டுகள் இருப்பதை மறைய செய்ய ஐஸ் பயன்படுத்தலாம். முகம் பார்ப்பதற்கு பிரகாசமாக பளிச்சென்று வெள்ளை நிறத்தில் தெரிய வேண்டும் என்றால் உருளை கிழங்கை அவித்து நன்கு மசித்து ஐஸ் கட்டியுடன் சேர்த்து முகத்தில் தொடர்ந்து பயன்படுத்த நல்ல பலனை பெறலாம்.