முடி உதிர்தலை தடுக்க வேப்பெண்ணெயை எப்படி பயன்படுத்தலாம்?
Thu, 14 Sep 2017

கிராமங்களில் உள்ள ஒரு சில வயதானோரின் தலைமுடி அடர்த்தியாகவும், கருப்பாகவும் இருக்கும். ஆனால் நம் இளைய தலைமுறையின் தலைமுடி கூட வெள்ளையாக இருக்கும். இதற்கு காரணம் வயதானோர்கள் தலைமுடியில் வேப்பெண்ணெய் தேய்ப்பது தான். இப்போது வேப்பெண்ணெயை பயன்படுத்தி முடி உதிர்தலை தடுக்கும் வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.
முடி உதிர்தலை தடுக்க வேப்பெண்ணெயை பயன்படுத்தும் முறை:-
- சிறிதளவு தேங்காய் எண்ணெயுடன் வேப்பெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் கலந்து இதமாக சூடாக்கி தலையில் தேய்த்து குளித்தால் முடி உதிர்வது குறையும்.
- வெந்தயப் பொடி, நெல்லிக்காய் பொடி, தேயிலை மர எண்ணெய், வேப்பெண்ணெய் அனைத்தையும் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து தலைமுடியை அலசினால் போதும். தலைமுடியில் ஏற்பட்ட பொடுகு பிரச்சனை சரியாகும்.
- ஆலிவ் எண்ணெயுடன் வேப்பெண்ணெய் கலந்து தலையில் பயன்படுத்தி சிறிது நேரம் கழித்து தலைமுடியை அலசினால் தலையில் ஏற்பட்ட அரிப்பு மறையும்.
வேப்பெண்ணெயுடன் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து தலைமுடியில் தடவினால் தலைமுடியின் வலிமை அதிகரிக்கும்.