எலுமிச்சை சாறை பயன்படுத்தி எப்படி எல்லாம் அழகை அதிகரிக்கலாம்!

எலுமிச்சை பழத்தில் அதிக அளவிலான வைட்டமின் – சி மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளது. மேலும் எலுமிச்சை பழத்தின் சாறு செல்களின் வளர்ச்சியை தூண்டுவதோடு இளமையான சருமத்தை தக்க வைத்து கொள்ள உதவுகிறது. எலுமிச்சை சாறை சருமத்திற்கு எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று இப்போது பார்க்கலாம்.
எலுமிச்சை சாறை பயன்படுத்தும் முறை:-
எலுமிச்சை பழத்தின் சாறினை முகத்தில் தடவினால் கிருமிகளின் தாக்கத்தால் ஏற்பட்ட கரும்புள்ளி, மங்கு, முகப்பரு போன்றவை மறையும்.
எலுமிச்சைப் பழத் துண்டுடன் தேன் சேர்த்து முகத்தில் தடவினால் கரும்புள்ளிகள் மறைந்து சருமம் அழகாக பளிச்சிடும்.
எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய், நாட்டு சர்க்கரை மூன்றையும் சேர்த்து பாதங்களில் தேய்த்து வந்தால் பாதத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதுடன் வெடிப்பு மறைந்து பாதம் மிருதுவாக மாறும்.
தலையில் ஏற்படும் அதிகப்படியான பொடுகு தொல்லையை சமாளிக்க எலுமிச்சை சாற்றினை நேரடியாக தலையின் அடிவரையிலும் படும் படி அலசினால் போதும். பொடுகு மறைந்து முடி வளர்ச்சி அதிகரிக்கும்.