உடல் எடையை குறைக்க வெள்ளரிக்காயை எப்படி பயன்படுத்தலாம்?

உடல் எடையை குறைக்க வெள்ளரிக்காயை எப்படி பயன்படுத்தலாம்?

கோடைக் காலத்தில் பேருந்துகள் மற்றும் இரயில்களில் பயணம் செய்யும் போது வெள்ளரிக்காயினை விற்பனை செய்வார்கள். அதை நாம் ஒரு முறையாவது வாங்கி சாப்பிடாமல் இருந்திருக்க மாட்டோம். வெள்ளரிக்காயில் அதிக அளவிலான சத்துகள் அடங்கி உள்ளன. அதன் தோலில் வைட்டமின் – சி அதிகம் அடங்கியுள்ளது. அதன் உட்பகுதியில் 96% நீர்ச்சத்து அடங்கியுள்ளது. வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க வெள்ளரிக்காயை பயன்படுத்தும் முறை:-

  • உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வெள்ளரிக்காயினை பச்சையாக ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பொதுவாகவே வெள்ளரிக்காயினை வேக வைத்து சாப்பிடக் கூடாது. அப்படி செய்தால் அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை அழிந்துவிடும்.

வெள்ளரியின் இதர பயன்கள்:-

  • வெள்ளரிக்காய் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மூட்டு வலி ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் சிறுநீரகத்தில் உருவான கற்களை அழிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
  • கேரட் மற்றும் வெள்ளரியை துண்டுகளாக வெட்டி தயிர் சேர்த்து பச்சடியாக சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். வெள்ளரிக்காயினை தொடர்ந்து சாப்பிட்டால் கண் பார்வை ஆரோக்கியமாகும்.

 

Share this story