அழகை அதிகரிக்க பாதாம் எண்ணெயை பயன்படுத்தும் முறை!
Mon, 11 Sep 2017

பாதாம் என்றாலே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என நமக்கு தெரிந்த ஒன்று தான். அந்த வகையில் இதிலிருந்து தயாரிக்கப்படும் பாதாம் எண்ணெயை சருமத்தில் பயன்படுத்தினால் பல்வேறு நன்மைகளை பெற முடியும். அதை இப்போது பார்க்கலாம்.
பாதாம் எண்ணெயின் பயன்கள்:-
- பாதாம் எண்ணெயின் அடர்த்தி மிகவும் குறைவு. எனவே இதை சருமத்தில் பயன்படுத்தினால் சருமம் விரைவில் உறிஞ்சி கொள்ளும். இதனால் வறட்சியான சருமத்தை தவிர்க்க முடியும்.
- உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டால் அதை தவிர்க்க ஒரு துளி பாதாம் எண்ணெயை உதட்டின் மீது தடவினால் வறட்சி ஏற்படாமல் தடுக்கலாம்.
- முகத்தில் ஏற்படும் சரும சுருக்கத்தை சரி செய்ய வைட்டமின் ஏ, மற்றும் வைட்டமின் பி சத்துகள் அதிகம் தேவை. எனவே இதனை அதிகம் பயன்படுத்துவதால் புதிய செல்கள் உருவாகுவதோடு இளமையான தோற்றம் உருவாகும்.
- முகத்தில் ஏற்படும் கரும்புள்ளியை சரி செய்ய பாதாம் எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் சருமம் அழகாகும். கரும்புள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் மறையும்.