பல் சொத்தை வந்துட்டு எப்படி சரி செய்ய?

எந்த உணவு சாப்பிட்டாலும் தண்ணீரை பயன்படுத்தி வாயை கொப்பளிக்க வேண்டும் இல்லையென்றால் சாப்பிடவை பற்களில் ஒட்டி கொண்டு பல் சொத்தை, பல் கூச்சம் ஏற்படும்.
தண்ணீருக்கு பதிலாக நல்லெண்ணையை உபயோகிக்க பற்களின் இடுக்குகளி உள்ள கிருமிகள் நீங்கி பற்கள் சுத்தம் ஆகும் மற்றும் வெள்ளை தோற்றத்தை பெரும் குணம் கொண்டது.
கிராம்புவை பல் சொத்தை உள்ள இடங்களில் அதன் எண்ணெயை வைத்து சிறுது நேரம் தூங்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர பல் சொத்தையை தடுத்து ஆரோக்கியமான பற்களை பெறலாம்.
நீருடன் உப்பை சேர்த்து வையை கொப்பளித்து வர பற்களில் உள்ளிருக்கும் பாக்டீரியா வெளியேறிடும்.
வெள்ளை பூண்டை உரித்து பல் சொத்தை இருக்கும் இடத்தில சிறிது நேரம் வைத்து பின் வையை கொப்பளிக்க பற்கள் நல்ல வலு பெரும், வாய் துர்நாற்றம் வராமல் தடுக்கும்.
வெந்நீரை கொண்டு வாயை கொப்பளிக்க பற்களில் உள்ள கிருமிகள் அழியும், அதனுடன் மஞ்சள் தூளையும் சேர்த்து கொள்ள நல்ல பலனை தரும்.