பேரிட்சை பழத்தில் எவ்வளவு நன்மை!

தினமும் ஒரு பேரீட்சம் சுளை சாப்பிட வேண்டும் என்பதே மருத்துவரின் ஆலோசனையாக இருக்கும், அதில் அந்த அளவுக்கு விட்டமின்கள் இருக்கின்றன.
இதை தொடர்ந்து சாப்பிடவதால் நம் கண்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. மலை கண் நோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டது.
நம் உடலுக்கு சுறு சுறுப்பு மற்றும் உற்சாகத்துடன் கூடிய புத்துணர்ச்சியை தரும் வல்லமை பேரீட்சைக்கு உண்டு.
ரத்த அழுத்தம், உறைதல் போன்ற இதய கோளாறுகளுக்கு பேரிட்சை ஒருவித மருந்து தான்.
சளி தொல்லை அதிகம் இருப்பவர்கள் பாலில் கலந்து சாப்பிடு வர சளி குறையும், நல்ல ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.
மறதி என்ற ஒன்று அனைவர்க்கும் இருக்க கூடியதே. அதற்கு தினம் ஒரு பேரிட்சை சாப்பிட ஞாபக சக்தி திறனை அதிகரிக்கும்.
ரத்தத்தை சுத்திகரித்து, ரத்த ஓட்டத்தை சீராக அமைய செய்யும். வயது கடந்த பிறகு ஏற்படும் முது வலி , எலும்பு வலிகளுக்கு இதன் பங்கு மிக அதிகமே .