சருமத்தின் அழகிற்கும் மற்றும் இதர பிரச்சனைக்கும் நல்ல மருந்து தான் தேன்!

தேனில் இருக்கும் அருமையான ருசி போகவே அதில் இருக்கும் நன்மைகளும் நமக்கு அழகை பாதுகாப்பதில் மிக அருமையானது.
தேனை பற்றி தெரிந்து கொள்ளலாம்!
தேன் கொடுக்கும் அழகு :
சருமத்தில் ஏற்படும் குறைபாடுகளை போக்க உதவும் ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் தேனில் இருக்கிறது. இதனை அப்படியே சருமத்திற்கு பயன்படுத்தலாம் மற்றும் அதனுடன் சில பொருட்களை பயன்படுத்தியும் உபயோகிக்க நல்ல பலனை காணலாம்.
1.தேனுடன் எலும்பிச்சை :
1/2 கப் தேனுடன் ஒரு எலும்பிச்சை பழத்தின் சாற்றினை கலந்து தினம் முகத்திற்கு பயன்படுத்த பருக்கள் மறைந்து அதனால் ஏற்படும் தழும்புகளும் குணம் ஆகும். வயதானதும் ஏற்படும் சுருக்கங்கள், முக பொலிவை மீட்க இதனை பயன்படுத்தலாம். இரண்டு வாரத்திற்குள் சருமத்தில் மாற்றங்களை காணலாம்.
2.தேனுடன் கடலை மாவு :
இது நல்ல பேசியலாக இருக்கும். தேனுடன் கடலை மாவை கலந்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் கருமை திட்டுகள் இருக்கும் இடத்திலும் மற்றும் கை, கால்களில் இருக்கும் கருமை நிறத்தை போக்கவும் பயன்படுத்தலாம். இதனை சருமத்தில் பயன்படுத்திய பின்னர் ஐஸ் கட்டியை கொண்டு சருமத்திற்கு மசாஜ் செய்து வர சருமத்தில் புதிய செல்களை உருவாக்கும், முகத்தை பளிச்சென்று வைத்து கொள்ளவும் உதவுகிறது.
3.தேனுடன் மஞ்சள் :
இது முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை உதிர்த்து, முகத்தின் அழகையும் கூட்டும் ஆற்றல் கொண்டது. இதனை முகத்தில் ஏற்படும் காயங்கள், தழும்புகளுக்கும் அதனால் ஏற்படும் இதர கோளாறுகளுக்கும் பயன்படுத்தலாம். மஞ்சளை மட்டும் கை, கால்களில் ஏற்படும் வெடிப்புகள், ரத்த கசிவிற்கு பயன்படுத்த விரைவில் குணம் ஆகும்.
4.தேனுடன் தயிர் :
சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்கி மேனியை அழகு படுத்த உதவும் தேனையும், தயிரையும் கலந்து பயன்டுத்தலாம். தயிரில் இருக்கும் கெட்டி பதம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை அகற்றும் மற்றும் சருமத்தை வெயில் காலங்களில் பாதுகாக்கிறது, எப்பொழுதும் ஈர பதத்துடன் வைத்து கொள்ள உதவுகிறது.