கற்றாழையை பயன்படுத்தி வீட்டிலேயே சோப்பு தயாரிக்கும் முறை!

கற்றாழையை எல்லா சரும பிரச்சனைக்கும் பயன்படுத்தலாம் என்று அனைவரும் அறிந்த ஒன்று தான். பிரபல சோப்பு தயாரிக்கும் நிறுவனங்களும் சோப்பில் கற்றாழை அடங்கியுள்ளது என்றே விளம்பரப்படுத்துவார்கள். வீட்டிலேயே கற்றாழையை பயன்படுத்தி சோப்பு தயாரிக்கும் முறையை பார்க்கலாம்.
சோப்பு தயாரிக்கும் முறை:-
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கெட்டியாகாமல் இருக்குமாறு கலக்க வேண்டும்.
கற்றாழையில் இருந்து அதன் ஜெல்லை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய் சேர்த்து கொள்ளவேண்டும். இவை அனைத்தும் சோப்பிற்கு ஈரப்பதத்தை வழங்கும்.
கற்றாழை ஜெல்லுடன் வாசனை திரவியங்களான தாழம்பூ எண்ணெய் போன்றவற்றை சேர்த்து கலந்து அச்சுகளில் வார்த்து எடுத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து ஏழு நாள்கள் கழித்து எடுத்தால் போதும் இயற்கையான கற்றாழை சோப்பு தயார்.