Tamil Wealth

வீட்டை சுத்தும் கரப்பான் பூச்சி தொல்லையா?

வீட்டை சுத்தும் கரப்பான் பூச்சி தொல்லையா?

வீட்டின் அனைத்து இடுக்குகளிலும் சாம்பிராணி புகை போட கரப்பான் பூச்சி தொல்லை தீரும் , கொசுக்களும் அதிகமே காண படுகிறது.

சாம்பிராணியை நன்கு தீயில் வாட்டி அதிலிருந்து வரும் புகையை வீட்டில் அனைத்து அறைகளிலும் முக்கியமாக கரப்பான் பூச்சிகள் அதிகம் உலாவும் இடங்களிலும் புகை போட வேண்டும்.

எண்ணெயை கொண்டு தயாரிக்கப்படும் ஸ்ப்ரே போன்ற பொருட்களை கொண்டும் வீட்டில் இருக்கும் பூச்சிகளினை விரட்டலாம் மற்றும் கட்டுப்படுத்தலாம்.
நம் கை, கால்களில் தேங்காய் எண்ணெய் தினமும் தேய்க்க கொசுக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகளினால் ஏற்படும் தொற்றுகளிடம் இருந்து நம்மை பாதுகாக்கும்.

வீட்டின் சுத்தம் மிகவும் முக்கியம் கழிவுகளால் இந்த பூச்சிகளின் தொல்லைகள் அதிகம் உருவாகும்.

வினிகர் மூலம் உற்பத்தியாகும் வேதி பொருட்களை கொண்டும் வீட்டின் இடுக்குகளில் இருக்கும் பூச்சிகளின் பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.

பூச்சிகளை விரட்டும் வகையில் விற்கப்படும் ரசாயன பொருட்களை வாரத்திற்கு இரு முறை பயன்படுத்த வீட்டில் எவ்வித பூச்சிகளின் தொல்லைகள் இருக்காது.

Share this story