உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிமுறைகள்!
Sep 11, 2017, 20:30 IST

பல்வேறு வேலைகளை செய்வதற்கும் பல இடங்களில் சுற்றி திரிவதற்கும் நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சில உணவு பழக்கங்கள் மற்றும் பழக்க வழக்கங்களை மாற்றினாலே போதுமானது அதனை பற்றி இப்போது பார்க்கலாம்.
உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிமுறைகள்:-
- சந்தைகளில் பேட் ப்ரீ, சுகர் ப்ரீ என விற்கப்படும் அனைத்து பொருள்களும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என சொல்ல முடியாது. சாக்லேட் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
- சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் முப்பது வருடமாக வெள்ளை அரிசி மற்றும் வெள்ளை சர்க்கரை, மைதா, பீட்ஸா, சோடா பானங்கள் போன்றவற்றை தொடர்ந்து சாப்பிடுபவர்களின் உடல் பருமன் அளவுக்கு அதிகமாகிறது என தெரிய வந்துள்ளது.
- அதிக அளவிலான கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே அளவோடு சாப்பிடுதல் நலம்.
- நீங்கள் அடிக்கடி இருமல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்டால் ஆரஞ்சு சாறு குடித்தால் உடல் நலத்தில் சீரான மாற்றம் ஏற்படும்.