உடற்பயிற்சி செய்யும் பொழுது ஏற்படும் காயங்களை குண படுத்த சில வழிகள்!

உடலையும் மனதையும் ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ள மேற்கொள்ளும் காலை மற்றும் மாலை உடற்பயிற்சியால் நமக்கு ஏற்படும் சிறு சிறு காயங்களை குண படுத்த மற்றும் அதனை தடுக்க சில வழிமுறைகளை தெரிந்து உடற்பயிற்சி செய்யுங்கள்.
உடற்பயிற்சியின் ஆரம்பம் :
சிலர் திடீர் என்று உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் பொழுது தசை பிடிப்புகள் மற்றும் எலும்புகளில் வலிகள், உடல் வலிகள் அனைத்தும் வரும். ஆர்வத்தில் முதலில் உடற்பயிற்சி செய்யும் பொழுதே அதிகமான ஈடுபாடுடன் செய்வார்கள். இது அதிகமான மூச்சு இளைப்பை ஏற்படுத்தும். ஆரம்பத்திலே அதிக ஈடுபாடு தேவை இல்லை கொஞ்சம் கொஞ்சமாக செய்வதே மிக நல்லது. முதலிலே உருவாகும் வலிகள் நாளடைவில் குணம் ஆகும், அதற்காக உடற்பயிற்சியை நிறுத்த வேண்டாம். உடல் வலிகளுக்கு ஏற்றாற்போல் செய்வது நல்லது.
ஆரம்பிக்கும் பொழுது மித வேகத்தில் செய்து சிறிது நாட்களில் வேகத்தை அதிகரிக்கலாம். நல்ல உடற்பயிற்சி நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். சீரான உடற்பயிற்சியை மேற்கொள்வதை கடைபிடியுங்கள்.
உடற்பயிற்சியில் அருந்த வேண்டியது?
உடற்பயிற்சி செய்யும் பொழுது உடலில் இருக்கும் நீர் சத்துக்கள் குறையும். அதனால் ஏற்படும் உடல் சோர்வை சரி காட்டும் வகையில் நீரினை அருந்துங்கள். நீர் சத்து மிக முக்கியம் உடற்பயிற்சிக்கு.
மருத்துவரின் ஆலோசனை :
உடற்பயிற்சியால் உடலில் ஏற்படும் வலிகள் அல்லது சில காயங்கள் நீண்ட நாட்களாக இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்டு உடலை காத்துக்கொள்ளுங்கள்.
உடற்பயிற்சி செய்த பின் உடனே தூங்குவது அல்லது படுப்பது, இனிப்பு சுவை கொண்ட உணவுகள் அல்லது எண்ணெயில் பொறித்த உணவுகளை சாப்பிடவே கூடாது.