Tamil Wealth

கால் விரல்களில் ஏற்படும் தொற்றுக்களை குணபடுத்த சில வழிமுறைகள்!

கால் விரல்களில் ஏற்படும் தொற்றுக்களை குணபடுத்த சில வழிமுறைகள்!

நாம் நடக்கும் பொழுது நிறைய தொற்று கிருமிகள் காலில் படும், அவைகள் ஏற்படுத்தும் நோய்களிடம் இருந்து நம்மை பராமரித்து கொள்ள சில வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாம்.

சரி செய்ய உதவும் பொருட்கள் :

வெள்ளை பூண்டு :

வீட்டில் சமையலில் பயன்படும் பூண்டை நன்கு நசுக்கி அதனுடன் நீர் அல்லது வெந்நீரை சேர்த்து ஒரு பாத்திரத்தில் வைத்து அதனுள் கால்களை வைத்து சிறிது நேரங்கள் சென்ற பின் கால்களை நீரினால் அலச கால்கள் மற்றும் விரல்களில் ஏற்படும் தொற்றுகள், நுண்கிருமிகள் அழிந்து பாதுகாப்பு தரும்.

தேங்காய் எண்ணெய் :

சிறிது காயம் ஏற்பட்டாலும் எண்ணெய் போடுவதே வழக்கம். அதேப்போல் காலில் அல்லது பாதத்தில், விரல்களில் ஏற்படும் பாதிப்புக்கு எண்ணெய் போடுவதன் மூலம் குணம் காணலாம்.

மஞ்சள் :

அழகை தரும் மஞ்சளை நன்கு அரைத்து அதனுடன் சிறிது நீர் கலந்து கால்களில் பாதிப்பு இருக்கும் இடத்தில் தினமும் தடவி வர தொற்றுகள் நீங்கி வேறு எவ்வித தொற்றுகளும் ஏற்படாமல் பாதுகாக்கும் திறன் கொண்டதே மஞ்சள்.

வெங்காயம் :

வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நன்கு அரைத்து அதன் சாற்றினை தனியே பிரித்து எடுத்து அதனை கால் விரல்களில் காயம் அல்லது சிதைவு இருக்கும் இடங்களில் பயன்படுத்த வேண்டும். பின் சிறிது நிமிடங்கள் கழித்து நீரினை கொண்டு கழுவ வேண்டும்.

 

Share this story