தூக்கத்தை பற்றி கண்டிப்பாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில குறிப்புகள்!

நல்ல தூக்கமே நல்ல ஆரோக்கியம். இரவு தூக்கத்தை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளுங்கள்.
இரவு தூங்கி கொண்டிருக்கும் பொழுது திடீர் என்று சத்தம் கேட்கும் பார்த்தால் அருகில் உறங்குபவர் குறட்டை விடுவார்கள், இதனால் நம் தூக்கம் பாதிக்க படும்.
சிலருக்கு தூங்கும் பொழுது வாயினை திறந்து கொண்டே தூங்குவது மற்றும் பாதி கண்களை திறந்து கொண்டே தூங்கும் பழக்கம் இருக்கும். அவர்களிடம் சொன்னால் நம்ப மாட்டார்கள். அயர்ந்த உறக்கத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதே நமக்கு தெரிவதில்லை. உறக்கத்தில் பலர் பேசுவார்கள், ஏன் நடந்து செல்கிறார்கள், இவை எல்லாம் அவர்கள் உணராமல் ஆழ்ந்த தூக்கத்தில் செய்கிறார்கள். சிலருக்கு கனவுகளில் ஏற்படும் விஷயங்களை நிஜத்தில் செய்வது போலவே தோன்றும். கனவுகளில் செய்யும் விசயங்களை நிஜமாவாகவே செய்வது போன்று தூக்கத்தில் கை, கால்களை அசைத்து கொண்டு பேசி கொண்டே இருப்பார்கள்.
நாம் ஆழ்ந்து யோசித்த விசயங்களே கனவாக வரும். அதன் செயல் பாடே உறக்கத்தில் நாம் செய்யும் செயல்கள். இப்பொழுது எல்லாம் சிலர் நின்று கொண்டு, உட்கார்ந்து கொண்டே தூங்குகிறார்கள். இதெற்கெல்லாம் காரணம் உடல் சோர்வை மற்றும் அதிகமான கார்பன்டை ஆஸ்ஷைடு அதிகம் இருப்பதனால் தூக்கம் வரும்.