Tamil Wealth

பற்களை வெண்மையாக்க உதவும் சில டிப்ஸ் தெரிஞ்சிக்கலாம்

பற்களை வெண்மையாக்க உதவும் சில டிப்ஸ் தெரிஞ்சிக்கலாம்

பற்களில் படியும் கறைகள் மற்றும் மஞ்சள் நிறத்தை போக்கி உங்கள் பற்களை பளிச்சென்று வைத்து கொள்ள உதவும் சில வழிமுறைகளை தெரிந்து கொண்டு செயல் படுங்கள் . நமது முகத்தின் அழகை கொடுக்கும் விதமாக அமைவதில் பற்களும் ஒன்று. நாம் சிரித்தாலே முதலில் கவனிப்பது மற்றும் மற்றவர்களை கவர்வது பற்கள் தான். அதனால் நமக்கு ஏற்படும் முக வசீகரம் வெண்மை பற்களை கொண்டே.

உங்கள் பற்களை பளிசென்று வைத்து கொண்டு அழகான சிரிப்பினை கொடுக்க உதவும் குறிப்புகள் இதோ !

தேவையான பொருட்கள் :

ஸ்ட்ரா
காய்கறிகள்
பழங்கள்
ஆயில் புல்லிங்
ஸ்ட்ராவ் பெர்ரி
சோடா எலும்பிச்சை

மேற்கூறிய பொருட்களை பயன்படுத்தினாலே போதுமானது. உங்கள் பற்களை வெண்மை நிறமாக எளிதில் மாற்றலாம்.

ஸ்ட்ரா :

குளிர்பானம் குடிக்கும் பொழுது எல்லோரும் உபயோகிக்கும் ஒரு பொருளே ஸ்ட்ரா . இதனை கொண்டு எப்படி மஞ்சள் பற்களை வருவதை தடுக்கலாம் என்ற எண்ணம் உங்களுக்கு உருவாகலாம். குளிர்பானங்களில் இருக்கும் அதிகமான சர்க்கரை மற்றும் பொடிகள் பற்களில் படாதவாறு குடிக்க ஸ்ட்ரா பயன்படுத்த பற்களில் எவ்வித கறைகளும் சேராது. இதனால் குடிக்கும் எந்த குளிர்பானதாலும் பற்களில் சொத்தை, கூச்சமோ, நிற மாற்றமோ ஏற்படாது.

காய்கறிகள் :

காய்கறிகளில் பச்சையாகவே உண்ண கூடியவைகளை நன்கு மென்று சாப்பிட பற்களில் இருக்கும் கறைகள் நீங்கும் மற்றும் பற்களுக்கு தேவையான உறுதியையும் கொடுத்து ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ளும் ஆற்றல் கொண்டது. காய்கறிகளை போலவே பழங்களையும் நன்கு மென்று சாப்பிட பற்களுக்கு வலிமையை கொடுத்து பற்களை பாதுகாக்கும். காய்கறிகள் மற்றும் பழங்களை சுத்தம் செய்து சாப்பிடுங்கள்.

ஆயில் :

ஆயில் புல்லிங் என்பது எண்ணெயை வாயில் இட்டு கொண்டு வாயினுள் எல்லா புறங்களிலும் செல்லுமாறு தாடைகளை அசைத்து கொப்பளிக்க வேண்டும். இதனை 15 நிமிடங்கள் செய்தலே போதுமானது. நீங்கள் பயன்படுத்த வேண்டிய எண்ணெய் ஆர்கானிக் எண்ணெய். கொப்பளித்த பின்னர் வாயினை நீரினை கொண்டும் கொப்பளியுங்கள், இது உங்கள் வாயில் இருக்கும் நுண் கிருமிகளை கூட அழித்து வெளியேற்றும் மற்றும் உடலையும் பற்களையும் ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ளும்.

பழங்களில் ஸ்ட்ராவ் பெர்ரி :

நீங்கள் பற்களுக்கு பயன்படுத்தும் பேஸ்ட் போலவே ஸ்ட்ராவ் பெர்ரி பழங்களின் சதை பற்றினை நன்கு மசித்து பேஸ்ட் போல் செய்த்து கொள்ளுங்கள். இதனை தினம் தூரிகையில் வைத்து பற்களில் தேய்த்து வர பற்களில் இருக்கும் கறைகள் நீங்கி வெண்மை நிறத்தை கொடுத்து உங்களுக்குபொன் சிரிப்பை கொடுத்து அழகூட்டும் .

சோடா :

சோடாவுடன் எலும்பிச்சை பழத்தின் சாற்றினையும் கலந்து பற்களில் வாரத்திற்கு ஒரு முறை உபயோகிக்க போதுமானது. சிலருக்கு இது ஒத்துக்கொள்ளாத நிலையில் உடனே வாயினை கழுவி விடுங்கள். மேற்கூறிய கலவையை துணியில் தோய்த்து பற்களில் பயன்படுத்துங்கள். அதிகமாக பயன்படுத்த வேண்டாம், பற்களில் பாதிப்புகள் ஏற்படும்.

Share this story