Tamil Wealth

முடிகளை பராமரிக்க உதவும் சில டிப்ஸ் தெரிஞ்சிக்கோங்க!

முடிகளை பராமரிக்க உதவும் சில டிப்ஸ் தெரிஞ்சிக்கோங்க!

கூந்தலை பராமரிப்பது மிக பெரிய பிரச்சனை தான் இன்றைய நிலையில். தலையில் அரிப்புகள், பொடுகு தொல்லைகள் ஏற்பட்டால் அதனை சாதாரணமாக விட கூடாது. அது நாளடைவில் முடிகளை விரைவில் உதிர்த்து விடும்.

முடி வளர்ச்க்கு தேவையான வைட்டமின் :

  • வைட்டமின் எ
  • வைட்டமின் சி
  • வைட்டமின் இ
  • கால்சியம்
  • மக்னீசியம்
  • ஜிங்க்
  • பொட்டாசியம்
  • செல்னியம்

மேற்கூறியவை அனைத்தும் முடிகளில் வளர்ச்சிக்கும் மற்றும் பராமரிப்புக்கும் உகந்த வகையில் கற்றாழையில் இருக்கிறது. கற்றாழையில் இருக்கும் ஜெல்லினை தலை முடிகளுக்கு பயன்படுத்த முடி உதிர்வு, பொடுகு தொல்லைகளை அகற்றும் மற்றும் பேன்களை நீக்கி, கூந்தலை நீளமாக வளர செய்யும் ஆற்றல் கொண்டது. தலையில் ஏற்படும் அரிப்புக்கு இதனை பயன்படுத்தி சிறிது நேரத்தில் ஷாம்பு கொண்டு குளித்து வர நல்ல பலனை கொடுக்கும்.

காலையில் அருந்தும் கிரீன் டீ :

தினம் அருந்தும் கிரீன் டீயை தலை முடிகளுக்கு பயன்படுத்த நீளமான கூந்தலை பெறலாம் மற்றும் இதில் இருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் பாலிபினால் முடிகளின் ஆரோக்கியத்திற்கும், முடிகளில் ஏற்படும் குறைபாடுகளை சரி செய்யவும் உதவுகிறது. சூடாக பயன்படுத்த கூடாது, நன்கு குளிர்ந்த நிலைக்கு வந்த பிறகே பயன்படுத்துங்கள்.

நீருடன் எலும்பிச்சை :

ஒரு கிண்ணத்தில் எலும்பிச்சை சாறினை எடுத்து கொண்டு அதனுடன் நீரினை கலந்து தலை முடிகளின் வேர் நுனி வரை தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இதனை கடைபிடிக்க கூந்தல் நன்கு பராமரிக்க படும்.

டீ ட்ரீ ஆயில் :

டீ ட்ரீ ஆயில் கொண்டிருக்கும் ஆண்ட்டிமைக்ரோபியல் முடிகளில் ஏற்படும் குறைபாடுகளுக்கு மிகவும் உகந்தது மற்றும் நீங்கள் உபயோகிக்கும் எண்ணெயிலும் கலந்து உபயோகிக்க தலையில் ஏற்படும் அரிப்பை கட்டுப்படுத்தும்.

வினிகர் :

முடிகளில் ஏற்படும் வறட்சியை போக்கவும் மற்றும் எளிதில் உடையும் முடிகளுக்கு வலு கொடுக்கவும் குளித்த பின்னர் முடிகளில் ஆப்பிள் சிடர் வினிகரை பயன்படுத்தினால் முடிகள் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

Share this story