ஓடி ஆடி விளையாடும் குழந்தைகளின் நலனை கருதி சில குறிப்புகளை காணலாம்!

குழந்தைகளின் விளையாட்டு :
குழந்தைகளில் விளையாட்டில் அதிகம் ஈடுபாடு கொண்டு இருப்பதால் வேளைக்கு சாப்பிட மறக்கிறார்கள், தூங்க மாட்டார்கள். எந்நேரமும் விளையாட்டு என்றே இருப்பார்கள். அவர்கள் நலனில் நாம் கொடுக்கும் அக்கறையே அவர்களின் வளர்ச்சிக்கும் மற்றும் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
உபயோகிக்கும் பொருட்கள் :
அவர்களுக்கு உபயோக படுத்தும் ஷாம்பு அல்லது சோப்பு போன்ற வேதி பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கை முறையில் உருவான பொருட்களையே பயன்படுத்துங்கள், ஏனென்றால் குழந்தைகளின் சருமம் மிகவும் மிருதுவானது. அவர்களுக்கு சிறு வயதிலே வேதி பொருட்களின் மூலம் உருவான பொருட்களை பயன்படுத்த வேண்டாம். அது அவர்களின் சருமத்தில் கோளாறுகளை ஏற்படுத்தும்.
குழந்தைகளின் சருமம் :
குழந்தைகளின் சருமம் மிக மென்மை என்பதால் கொசுக்களின் கடிகளால் எளிய முறையில் நோய் தொற்றுக்களை ஏற்படுத்தும். இதற்கு நல்ல நிவாரணியாக அவர்களின் கை, கால்களில் தேங்காய் எண்ணெய் தினமும் தடவி விடுங்கள், முக்கியமாக அவர்கள் விளையாட செல்லும் பொழுது கட்டாயம் தேய்த்து விடுங்கள், அவர்கள் விளையாடும் இடங்களில் இருக்கும் தொற்றுக்கள் அவர்களை அண்டாமல் இருக்கும்.
ஆரோக்கியமான உணவுகள் :
குழந்தைகளுக்கு சிறு வயதிலே தானியங்கள் போன்ற இயற்கையில் உருவான உணவு பொருட்களையே சாப்பிட கொடுங்கள். கொண்டகடலை, பருப்பு வகைகள், மக்கா சோளம் போன்ற உணவுகளையே ஸ்னாக்ஸ் என்ற பெயரில் கொடுக்க நல்ல ஆரோக்கியத்தை தரும்.