வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் போது நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சில செயல்கள்!!

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் போது நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சில செயல்கள்!!

காலையில் எழுந்ததும் நீர் குடிப்பதால் உடலில் பலவிதமான் நன்மைகள் ஏற்படுகின்றன என அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் அதை குடிப்பதற்கு முன்னரும் பின்னரும் சில செயல்களை பின்பற்றினாலே முழு பலனும் நமக்கு கிடைக்கும். நாம் செய்ய வேண்டிய செயல்களை பற்றி இப்போது பார்க்கலாம்.

தண்ணீர் குடிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய சில செயல்கள்:-

  • தூங்கி எழுந்ததும் வெறும் வயிற்றில் நீரை அருந்தும் போது பற்களை சுத்தம் செய்து விட்டு தண்ணீர் குடிக்கலாம் என்று நினைக்க கூடாது. அதற்கு பதிலாக பல் துலக்கும் முன்னரே நீரை குடிக்க வேண்டும். குறைந்தது 3 டம்ளர் நீராவது குடிக்க வேண்டும்.
  • நீர் குடித்த 45 நிமிடம் வேறு எதையும் சாப்பிடக் கூடாது. 45 நிமிடம் கழித்து காலை உணவை வழக்கம் போல் சாப்பிடலாம்.
  • தினமும் மூன்று வேளை சாப்பிட்ட பிறகு வேறு எந்த பொருளையும் நொறுக்கு தீனியாக கூட சாப்பிடக் கூடாது.
  • முதல் நாள் 3 டம்ளர் நீர் அருந்தினால் அடுத்த நாள் சிறிது சிறிதாக நீர் குடிக்கும் அளவை அதிகரித்து கொள்ள வேண்டும்.

நன்மைகள்:-

உடலில் ஏற்படும் எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் இந்த நீர் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். முக்கியமாக சொல்லப் போனால் ஆஸ்துமா,  வாந்தி, சிறுநீரக் நோய், நீரிழிவு, தலைவலி, கண் நோய், மூட்டு வலி, உடல் பருமன் போன்ற பிரச்சனையிலிருந்து விடுபடலாம். ஒவ்வொரு பிரச்சனைக்கும் சில குறிப்பிட்ட நாள் இதை செய்தாலே போதும் நோய் குணமாகி உடல் நலம் சீராவதை பார்க்கலாம். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் முப்பது நாள்களும் காசநோய் உள்ளவர்கள் 90 நாள்களும் இதை செய்தாலே போதும். நோயிலிருந்து நல்ல தீர்வு கிடைக்கும்.

Share this story