இதயத்தின் ஆரோக்கியத்திற்கு நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள்!

இதய நோய்கள் உருவாக உடல் எடை அதிகரிப்பும் ஒரு காரணமே. அதிக உடல் பருமனை கொண்டவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்து அது மாரடைப்பு, இதய கோளாறுகளை ஏற்படுத்தும், இதனை கட்டுப்படுத்த நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் இதோ.
சிலருக்கு உடல் எடை எலும்புகளின் எடையால் உருவாகலாம், சிலருக்கு உடலில் நீர் சேருவதால் பருமன் அதிகரித்து உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமே!
உடலுக்கு எப்பொழுதும் போதுமான உடற்பயிற்சி வேண்டும். ஆகவே நடைப்பயிற்சி, ஸ்கிப்பிங், சைக்கிளிங், ஓட்டப்பயிற்சி போன்றவைகளில் ஏதேனும் ஒன்றையாவது காலை துயில் எழுந்து செய்யுங்கள். இதனை தொடர்ந்து கடைபிடித்தால் இதயத்தை ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ளும். அதிக எடை கொண்டவர்களுக்கு வியர்வையின் மூலமும் சிறுநீர் வழியாகவும் கொழுப்புகள் வெளியேற்ற படும்.
வறட்சி :
உடலில் இருக்கும் நீரினை வெளியேற்ற, வறட்சியை போக்க தினமும் அதிக நீரினை அருந்துங்கள். இதனால் வறட்சி குறைத்து கலோரிகள் எரிக்க பட்டு வெளியேற்ற படும்.
உப்பு :
உப்பு சத்துக்கள் இருக்கும் உணவுகளை அதிக பருமனை கொண்டவர்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் உடலில் நீரினை தக்க வைத்து கொண்டு நீரினால் உடல் பருமனை அதிகரித்து இதய நோய்களை உருவாக்கும்.
நீங்கள் எடுத்து கொள்ளும் காலை, இரவு உணவுகளில் அதிக உப்பு இருக்கும் உணவுகளை எடுத்து கொள்ள கூடாது. அதற்குப்பதிலாக தானிய உணவுகள், சத்தான காய்கறிகள், பழங்கள் சாப்பிடுங்கள்.
உடல் எடைக்கும் தூக்கத்திற்கும் சம்மந்தமே?
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்து பகலில் தூங்க கூடாது என்று நினைக்கிறார்கள். நீங்கள் நினைப்பது தவறு, மதியம் சிறிய தூக்கம் மிகவும் நல்லதே.
இரவு நேரத்தில் கண்டிப்பாக எட்டு மணி நேர தூக்கம் அவசியம். இல்லையென்றால் அது உடல் பருமனை அதிகரிக்கும் மற்றும் இதய கோளாறுகள், கண் குறைபாடுகளையும் ஏற்படுத்தும்.
உணவுகள் :
உடல் பருமனை குறைக்க விரும்புவோர் எடுத்து கொள்ள வேண்டிய உணவு நார் சத்துக்கள் இருக்கும் உணவுகள், பழங்கள், காய்கறிகள் போன்றவையே. இதனை சாப்பிடுவதால் அதிக பசி எடுக்காது, திருப்திக்கு சாப்பிட உணர்வை கொடுக்கும்.