முகப்பருக்களை சரி செய்ய உதவும் சில எளிய வழிமுறைகள்!

முகப்பருக்களை சரி செய்ய உதவும் சில எளிய வழிமுறைகள்!

முகப்பருக்கள் ஹார்மோன் மாற்றம் மற்றும் எண்ணெய் பசையான சருமம் போன்றவற்றால் ஏற்படுகிறது. இது ஒருவரின் அழகை கெடுக்கிறது. முகப்பருக்களை சரி செய்ய உதவும் வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.

  • சந்தனத்தை பொடியாக்கி சருமத்தில் தடவி சிறிது நேரம் கழித்து காய்ந்ததும் கழுவினால் கண்ணில் உள்ள கருவளையம், முகப்பரு, மற்றும் முகப்பரு தழும்புகள் போன்றவற்றை சரி செய்ய பயன்படுகிறது.
  • முகப்பரு அதிகம் உள்ளவர்கள் சந்தனம் மற்றும் வேப்பிலையை பொடி செய்து முகத்தில் தடவி காய்ந்த பிறகு கழுவினால் பருக்கள் மறையும்.
  • வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்து பின்பு கழுவ வேண்டும். இதில் உள்ள பிளிச்சீங் தன்மை முகத்தில் உள்ள கருமைகளை மறைக்கிறது.
  • பால் மற்றும் சந்தனத்தை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்கள் மறையும். வாரத்தில் மூன்று முறை செய்தால் போதுமானது.
  • நாட்டு சர்க்கரை, தேன் மெழுகு சேர்த்து காய்ச்சி முகப்பருவின் மீது தடவுவதன் மூலம் பருக்களை விரைவில் மறைக்கலாம்.
  • முகப்பருவை போக்க டீ-ட்ரீ ஆயில், கற்றாழை ஜெல் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவினால் போதும்.

Share this story