பாத வெடிப்பை குணமாக்க சில சிறந்த மற்றும் எளிய வழிகள்!
May 4, 2018, 16:18 IST

பாதத்தை நாம் சரியாக பராமரிக்காமல் இருப்பதாலும், பாதத்தில் வறட்சி ஏற்படுவதன் மூலமும் வெடிப்பு ஏற்படுகிறது. பாதங்களை பராமரிப்பது பற்றியும் வெடிப்பை சரி செய்வதை பற்றியும் இப்போது பார்க்கலாம்.
பாத வெடிப்பை குணமாக்க சில சிறந்த மற்றும் எளிய வழிகள்:-
- மிருதுவான பாதம் வேண்டுமெனில் தினமும் குளிக்கும் போது பீர்க்கங்காய் நாரை பயன்படுத்தி பாதத்தை தேய்த்து குளித்தால் போதும்.
- பாத நகங்களில் இடையில் உள்ள அழுக்கை எளிதில் அகற்ற முடியாது. இதற்கு தீக்குச்சியின் மெழுகு பகுதியை நல்லெண்ணெயால் நனைத்து சூடு செய்து நகத்தின் இடையில் சுத்தம் செய்தால் அழுக்கு எளிதாக வெளியேறிவிடும்.
- காபி பொடியை பயன்படுத்தி வாரம் ஒருமுறையாவது பாதத்தில் தேய்த்து கழுவினால் பாதச் சுருக்கம் மறையும்
- பாதத்தில் ஏற்படும் வறட்சியை போக்க விளக்கெண்ணெய், வெள்ளை மெழுகு சேர்த்து சூடாக்கி ஆறிய பின்பு பாதத்தில் தடவினால் பாதம் மென்மையாகுவதுடன், வெடிப்பும் மறையும்.
கல் உப்பு, நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய், கலந்து காலில் தேய்த்து குளித்தால் வெடிப்பு மறைவதுடன் இறந்த செல்கள் வெளியேற்றப்படும்.