தீக்காயத்தினால் ஏற்படும் பாதிப்புகளை போக்க நீங்கள் செய்ய வேண்டிய சில முதலுதவிகள்!

தீயினால் ஏற்படும் பாதிப்புகள் கடுமையானதும் , ஆபத்தானதும் கூட. காயங்கள் ஆறினாலும் கூட தழும்புகள் இருக்கும், காயங்களை குண படுத்த உதவுவதை விட காயம் ஏற்பட்ட உடனே நீங்கள் செய்யும் முதலுதவியே காயத்தினால் அதிக பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும், அதன்பின்னரே காயத்தை போக்குவதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.
தீக்காயம் என்றாலே அடிக்கடி ஏற்படுவது சமையல் அறையில் நமது கவன குறைவால் நிகழ கூடியதே.
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முதலுதவிகள் :
#1
தீக்காயத்தினால் உண்டாகும் எரிச்சல் மற்றும் அதில் இருக்கும் நுண் கிருமிகள் அதிக வலிகளை ஏற்படுத்தும் அதனை போக்க காயத்தை முதலில் நீரினை கொண்டு கைகளை சுத்தம் செய்யுங்கள் பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலினை எடுத்து கொண்டு கைகளை அதனுள் செலுத்தி ஒரு 15 முதல் 20 நிமிடங்கள் வைத்து கொள்ளுங்கள். இதனால் காயத்தினால் ஏற்படும் எரிச்சல், அலற்சி, அரிப்புகள் தீரும், புண்களை எவ்வித தொற்றுகளும் அண்டாது.
#2
சமையல் அறையில் ஏற்படும் தீக்காயத்தை குண படுத்த அங்கயே இருக்கும் தயிரினை உபயோகிக்கலாம். இதனால் காயத்தினால் ஏற்படவும் வீக்கம், சிவந்த தோற்றம் மாறி விடும். காய்ந்த பிறகு மறுபடியும் பயன்படுத்த விரைவில் குணம் ஆகும்.
#3
உருளை கிழங்கில் இருக்கும்சத்துக்களில் சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பயன்படுவதை போலவே. அதன் தோல்கள் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது. சமையல் செய்யும் பொழுது தெரியாமல் சூடான பாத்திரத்தில் கைகளை வைத்தாலோ அல்லது சூடான நீர் கைகளில் கொட்டினால் ஏற்படும் காயங்களை போக்க உருளை கிழங்கின் தோலினை உரித்து காயம் பட்ட இடத்தில் வைக்க நல்ல பலனை கொடுக்கும்.
#4
பற்களில் இருக்கும் கறைகளை போக்க உதவும் பேஸ்ட் தீக்காயத்தினை போக்கும் வல்லமையும் கொண்டு உள்ளது. காயம் ஏற்பட்ட உடன் நீரில் சுத்தம் செய்து பேஸ்ட் பயன்படுத்த நல்லது.