Tamil Wealth

தொப்பையை குறைக்க உதவும் மூலிகை மருத்துவம்!

தொப்பையை குறைக்க உதவும் மூலிகை மருத்துவம்!

தொப்பையை குறைக்க உதவும் சில மூலிகைகளை பற்றி தெரிந்து கொண்டு, உங்கள் எடையை குறைக்கலாம்.

தொப்பையை குறைக்க உதவும் கொள்ளு :

கொள்ளுவை சுத்தம் செய்து வைத்து கொள்ளுங்கள், இதனுடன் வசம்பை சேர்த்து அரைத்து சாப்பிடலாம் அல்லது வெறும் கொள்ளை மட்டுமே சாப்பிட நல்ல பலனை தரும்.

கொள்ளுடன் இதர பொருட்களையும் கலந்து மசாஜ் செய்ய தொப்பை விரைவில் குறையும். அதனை பற்றி பார்க்கலாம்.

கொள்ளு , திரிபலா பௌடர், சங்கல் கோச்டம் (Chengalva Kostu ), லோத்திரம் (Lodhra ), வசம்பு இவைகளை நன்கு அரைத்து அதனுடன் எண்ணெய் கலந்து தொப்பையில் நன்கு தேய்த்து மசாஜ் செய்ய இரண்டு வாரத்திற்குள் உங்கள் எடையை சோதித்து பார்த்தால் கண்டிப்பாக மாற்றம் இருக்கும்.

மசாஜ் :

தொப்பையில் நன்கு சுற்றி இரு கைகளையும் கொண்டு கடிகார நேர் திசை மற்றும் எதிர் திசையில் மாற்றி மாற்றி மசாஜ் செய்ய வேண்டும். இந்த மசாஜ் 15 அல்லது 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும், இதனால் வயிற்றில் அதிக கொழுப்புகள் இருக்கும் பகுதியில் நன்கு தேய்க்க கொழுப்புகள் குறையும், இதனை சருமத்தில் பயன்படுத்துவதால் சரும துளைகள் திறந்து கொழுப்புகள் வெளியேற்ற படும்.

மேற்கூறிய பொருட்களின் மூலம் உடலில் இருக்கும் கெட்ட கொள்ளுங்கள் மற்றும் நீரினால் உருவான பருமனையும் குறைக்க மிகவும் பயன் உள்ளதாக கருத படுகிறது. இயற்கை பொருட்களையே உபயோகிப்பதால் எவ்வித பக்க விளைவுகளும் வராது என்பதில் ஐயமில்லை.

இந்த முறைகளை தினம் செய்து வர தொப்பை குறையும், அடி வயிற்றில் நன்கு தேய்க்க விரைவில் கொழுப்புகள் வெளியேற்ற படும். இந்த ஆயுர்வேத சிகிச்சையின் மூலம் உடல் பருமன் குறைவதோடு, நல்ல உடல் வலிமையையும் பெறலாம்.

Share this story