Tamil Wealth

கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவும் மூலிகை மருத்துவம்!

கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவும் மூலிகை மருத்துவம்!
உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவும் ஒரு அற்புதமான பொருளே கொள்ளு, இதனை கொண்டு வீட்டில் செய்யும் குழம்பு மற்றும் துவையல் நமக்கு நல்ல பலனை கொடுக்கும். இதனை எப்படியெல்லாம் சாப்பிட கலோரிகள் எரிக்க படும் என்பதை பற்றி பார்க்கலாம்.

கொள்ளு :

கொள்ளுவை கொண்டு உங்கள் எடையை குறைக்க வேண்டும் என்றால் இரவு தூங்குவதற்கு முன்னர் கொள்ளுவை நீருடன் சேர்த்து ஊற வைத்து காலை எழுந்தவுடன் அதனை வேக வைத்து சாப்பிடலாம் மற்றும் இதனை அப்படியே தின்பதாலும் உடலில் இருக்கும் கொழுப்புகள் கரைக்க பட்டு சிறுநீர் வழியாக வெளியேறும்.

கொள்ளு மட்டும் போதுமா ?

கொள்ளு மட்டுமே சாப்பிடுவதை பழக்கமாக கொள்ளாமல், சிறிது உடற்பயிற்சி மற்றும் உங்கள் உணவு பழக்கங்களில் கொஞ்சம் கட்டுப்பாடு ஆகியவை மிக முக்கியமே. தினமும் காலை 15 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தலே போதுமானது. எண்ணெய் பலகாரங்கள், அதிகமான நொறுக்கு தீனிகள் அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

கொள்ளுவை பொடியாக்கி இட்லி, தோசை போன்றவைகளுக்கு தொட்டு சாப்பிடலாம். தினம் நீங்கள் எடுத்து கொள்ளும் கொள்ளு உங்கள் எடையை விரைவில் குறைக்கும் மற்றும் இதனுடன் தேனை கலந்து குடிக்கவும் விரைவில் மாற்றத்தை காணலாம்

கொள்ளுவை சாப்பிடுவதை போலவே அதனை கொண்டு தயாரிக்க படும் எண்ணெய் மற்றும் மருந்து பொருட்களை கொண்டு மசாஜ் செய்வதன் மூலமும் கொழுப்பை குறைக்கலாம். கொள்ளு எண்ணெயை கொழுப்பு இருக்கும் இடத்தில், அடி வயிற்றில் நன்கு தேய்க்க கொழுப்புகள் குறைத்து அழகான தோற்றத்தை பெறுவீர்கள்.

இதனை தினம் மேற்கொண்டு உங்கள் எடையை விரைவில் குறைத்து ஒல்லியான தோற்றத்தை பெறுங்கள், பயன் பெறுங்கள்.

Share this story