Tamil Wealth

வாகனங்களில் செல்லும் பொழுது தலைக்கவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும்!

வாகனங்களில் செல்லும் பொழுது தலைக்கவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும்!

நாம் வாகனங்களில் செல்லும் பொழுது சில நேரங்களில் தலைக்கவசத்தை மறந்து விடுகிறோம். இது மறக்க கூடிய பொருள் அல்ல நம் உயிரை காக்கும் கருவி என்பதை உணர்ந்து இனி வாகனத்தில் செல்லும் பொழுது ஞாபக படுத்தி கவனத்துடன் அணிந்து செல்லுங்கள். உயிரை காக்கும் கவசமாக மட்டுமல்லாமல் சருமத்தை பராமரிக்கும் காரணியாகவும் பயன்படுகிறது.

தலைக்கவசம் உயிர் கவசம் மறவாதீர்கள் :

வாகனங்களில் செல்லும் ஒவ்வொருத்தரும் கட்டாயம் அணிய கூடியது. வாகனத்தை ஓட்டுபவர் மட்டுமல்லாமல் உடன் செல்பவர்களும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். விபத்து ஏற்படும் பொழுது முதலில் தூர வீசப்பட்டு காயம் அடைவோர் வாகனத்தில் பின் அமர்ந்து இருப்பவரே. விபத்தில் மண்டையில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். தலைக்கவசம் தலையை பாதுகாத்து பாதிப்புகளிடம் இருந்து தற்காத்து கொள்கிறது.

வாகனத்தில் செல்பவர்களின் எண்ணிக்கையை குறைத்து கொள்ள வேண்டும். அதேப்போல் வாகனத்தின் வேகத்தை மிதமாக வைத்து கொள்ள ரொம்ப நல்லது.

செல்லும் வாகனம் மிதிவண்டியாக இருந்தால் கூட தலைக்கவசத்தை அணிய சிறு பாதிப்புகளில் இருந்து கூட பாதுகாக்கலாம். சிறு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு என வடிவமைக்க பட்ட தலைக்கவசத்தை வாங்கி அணிந்து கொள்ள விபத்துகளில் இருந்து தப்பிக்கலாம்.

குழந்தைகள் மிதிவண்டி பழகும்பொழுது :

குழந்தைகள் மிதிவண்டி ஓட்டி பழகும் பொழுதும் அவர்களுக்கென்று ஒரு தலைக்கவசத்தை வாங்கி கொடுத்து ஒவ்வொரு முறையும் மிதிவண்டி ஓட்டும் பொழுது கட்டாயம் தலைக்கவசத்தை அணிந்து தான் செல்ல வேண்டும் என்று உறுதியாய் கூறுங்கள்.

முடி உதிர்வு கட்டுக்குள் வரும் :

தலைக்கவசத்தை அணிவதன் மூலம் வெயிலின் தாக்கத்தில் ஏற்படும் முடி வளர்ச்சியை தடுத்தல், முடி உதிர்வு, பொடுகு என அனைத்தில் இருந்தும் விடுதலை தரும்.

Share this story