செம்பருத்தி பூ கொடுக்கும் ஆரோக்கியமான மருத்துவம்!!!

செம்பருத்தி பூவினை பெண்கள் தலையில் வைத்து கொள்ள மட்டுமே பயன்படுத்துகிறார்கள் அதில் இருக்கும் மகத்துவம் தெரியவில்லை. அழகு சேர்க்கும் செம்பருத்தியை உபயோகித்து இளமையோடு காண செய்யுங்கள்.
செம்பருத்தியின் மருத்துவம்:
செம்பருத்தியின் இதழ்களை உண்பதும் மூலம் நல்ல நினைவாற்றலை பெறலாம். சிறு குழந்தைகளுக்கு இப்பூ நல்ல ஞாபக திறனை கொடுக்கும். இதை அப்படியே சாப்பிடுவதன் மூலம் இடுப்பு வலி, முதுகு வலி குணம் அடையும்.
இரும்பு சத்து குறைவினால் ரத்தத்தில் ஏற்படும் ரத்த சோகையை கட்டு படுத்த வேண்டும் என்றால் செம்பருத்தியை தினம் இரு முறை எடுத்து கொள்ளுங்கள்.
உடலுக்கு அழகு சேர்க்கும் விதமாகவும் பயன்படும் செம்பருத்தி உடல் தசைகளையும் பராமரித்து பொலிவுடன் வைக்கும். உடல் உஷ்னத்தையும் குறைத்து இதய தசைகளையும் வலு பெற செய்யும்.
வெள்ளை முடி பிரச்சனை, முடி உதிர்தல், முடி வளர்ச்சி இல்லாமல் காணப்படுதல் போன்ற பிரச்சனைகளுக்கு செம்பருத்தியை சாப்பிடுவதன் மூலமும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தலையில் தொடர்ந்து பயன்படுத்தவும் நல்ல நிலையை பெறலாம்.