ஆரோக்கியத்தை தந்து உயிரை காக்கும் ஆடாதோடா கீரைகள்!

சுவாச கோளாறுகளை நீக்கும் :
சுவாசத்தில் ஏற்படும் கோளாறுகளை நீக்க ஆடா தோடா இலைகளை எடுத்து அதனை கசக்கி மூக்கில் வைத்து சுவாசிக்க நல்ல பலனை தரும். உடலின் உட்புறத்தில் ஏற்படும் காயங்களை போக்கவும் இதன் இலைகளை அரைத்து சாற்றினை எடுத்து அதனுடன் சிறிதளவு எலும்பிச்சை சாற்றினையும் கலந்து அருந்த, பின்னர் அதனுடன் நீரினையும் அருந்த வேண்டும், இப்படி செய்வதால் உடலின் உட்புறத்தில் இருக்கும் எரிச்சல், புண்கள் விரைவில் குணம் ஆகும்.
விஷ கடிக்கு உகந்தது :
பூச்சிகளின் விஷ கடிகளால் ஏற்படும் நோய் தொற்றுக்களையும் மற்றும் நச்சு தன்மையையும் போக்க ஆடாதோடா இலைகளை அரைத்து அதனுடன் துளசி இலைகளையும் சேர்த்து அரைத்து சாற்றினை அருந்தலாம். உடலில் இருக்கும் நச்சு தன்மை அழிந்து உடலுக்கு நன்மை பயக்கும்.
இதய கோளாறுகள் :
அதிகமான சளி தொல்லையால் ஏற்படும் மாரடைப்பு, நெஞ்சு வலிகளை போக்க ஆடாதோடா இலைகளை அரைத்து அதனுடன் இஞ்சி, வெள்ளை பூண்டு, சுக்கு, மிளகு போன்றவற்றை சேர்த்து சமைத்து சாப்பிட விரைவில் குணம் ஆகும்.
வாந்தி :
அதிகமான இருமலால் ஏற்படும் வாந்தி மற்றும் ஒவ்வாமை தொல்லையால் ஏற்படும் வாந்திக்கு ஆடாதோடா இலைகளை அரைத்து குடிக்கலாம், அப்படியே குடிக்க விருப்பம் இல்லாதவர்கள் இனிப்பு சுவைக்கு வெல்லம், கருப்பட்டி அல்லது தேன் கலந்து அருந்த மிகவும் நல்லதே, உடலுக்கு ஆரோக்கியமே.
காச நோய் :
காச நோயை குண படுத்தவும் மற்றும் அதனால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகளையும் தடுக்க ஆடாதோடா இலைகளை பயன்படுத்துங்கள். நுரையீரல்களில் ஏற்படும் கோளாறுகளை போக்கவும், நன்கு காய்ந்த ஆடாதோடா இலைகளை எடுத்து இடித்து பொடியாக்கி கொள்ளுங்கள், பொடிகளை உணவுடன் அல்லது நீருடன், பாலுடன் கலந்து குடிக்கலாம், இனிப்பு சுவைக்கு தேனை கலந்து கொள்ளுங்கள், அடிக்கடி ஏற்படும் சளியை போக்கவும் வீட்டில் தயாரித்து வைத்து கொண்ட பொடியை பாலில் தேனுடன் கலந்து அருந்துங்கள் நல்ல பலனை தரும். அதிக மூலிகை மருத்துவத்தை கொண்டது.
இதர நோய்களையும் குண படுத்தும் :
ஆஸ்துமா
காய்ச்சல்
ஜுரம்
வயிற்று கோளாறுகள்
தழும்புகள், புண்களை குண படுத்தும்
வேர்களின் நன்மைகள் :
இலைகளை போலவே அதன் வேர்களும் கொடுக்கும் மருத்துவம் அதிகமே. சுகப்பிரசவம் நடைபெற ஆடாதோடா வேர்களை நீருடன் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, நீரினை வடிகட்டி தினம் ஒரு முறை பருக வேண்டும்.
நோய்களை தீர்க்கும் :
இரைப்பை கோளாறுகள்
சளி
இருமல்
சுவாச கோளாறுகள்
நரம்பியல் கோளாறுகள்
உடலில் ஏற்படும் வலிகள் அனைத்தையும் போக்கும் மருத்துவ குணம் கொண்டதே. இதனுடன் இதர காய்கறிகளையும் சேர்த்து சமைத்து சாப்பிட உடலுக்கு அதிக ஆரோக்கியமே.