Tamil Wealth

மணத்தக்காளி கீரை கொடுக்கும் ஆரோக்கியம்!!

மணத்தக்காளி கீரை கொடுக்கும் ஆரோக்கியம்!!

மணத்தக்காளி கீரையில் இருக்கும் புரத சத்துக்கள், மாவு சத்துக்கள் அனைத்தும் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்க கூடியது. இது நல்ல ஒரு அற்புத கீரை வகை நம் ஆரோக்கியத்திற்கு.

மஞ்சள் காமாலையால் பாதிக்க பட்டவர்கள் மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட விரைவில் குணம் அடைவீர்கள்.

இதய பலவீனத்தால் காணப்படுபவர்கள் மணத்தக்காளி கீரையுடன் மிளகு, இஞ்சி மற்றும் சமையலுக்கு சேர்க்கும் பொருட்களை சேர்த்து சமைத்து சாப்பிட இதயம் நல்ல வலு பெற்று ஆரோக்கியத்துடன் இயங்கும்.

தீராத சளி தொல்லையால் கஷ்ட படுவோர் அதனால் நெஞ்சு எரிச்சலால் அவதி படுவோர் இதன் வற்றலை சமையலில் சேர்த்து கொள்ளுங்கள். காய்ச்சலால் நெடு நாட்கள் கஷ்ட படுவோர் மணத்தக்காளி கீரையை நன்கு அவித்து இஞ்சி, மிளகு, சீரகம் சேர்த்து கொதிக்க விட்டு உணவுடன் சேர்த்து கொள்ள நல்ல பலனை காணலாம்.
வலிப்பு நோய் பாதிப்பு இருப்பவர்கள் தினம் உட்கொள்ளுங்கள்.
வாயில் ஏற்படும் துர்நாற்றம், வாய் புண்கள், ரத்தம் வருதல், ரத்தம் கட்டுதல் போன்ற பிரச்சனைகளுக்கு மணத்தக்காளி கீரையின் சாற்றை பிழிந்து எடுத்து வாயில் இட்டு நன்கு கொப்பளிக்க வாய் கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.

Share this story