வேப்பம் பூவின் மகிமை தெரிஞ்சால் ஷாக் ஆகிடுவீங்க!!

வேப்பம் மரமானது வாழை மரத்தினைப் போல் காய், பழம், பூ, பட்டை, இலை என அனைத்துப் பாகங்களையும் மனிதர்களுக்கு சிறந்த கொடையாக வழங்குகின்றது. வேப்பம் பூவின் மருத்துவ குணங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
வேப்பம் பூவானது செரிமான சக்தியினை மேம்படுத்துவதாக உள்ளது, பலருக்கும் இந்த வேப்பம் பூவினை எப்படிச் சாப்பிட வேண்டும் என்ற சந்தேகம் இருக்கும், அதாவது இதனை எண்ணெயில் பொரித்துச் சாப்பிடுவார்கள். இல்லையேல் குழம்பாக வைத்தும் சாப்பிடலாம்.
வேப்பம் பூ குழம்பானது வயிற்றில் உள்ள கிருமிகளை அளிக்கக் கூடியதாக உள்ளது, மேலும் இதனை தேங்காய்ப் பாலுடன் கலந்து சாப்பிடும்பட்சத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது.
மேலும் குழந்தைகளின் வயிற்றில் குடல் புழுக்கள் இருக்கும்பட்சத்தில் கட்டாயம் இதனை நாம் கொடுத்து வருதல் வேண்டும். மேலும் இந்தப் பூவானது வயிற்று வலி, வாயுத் தொல்லை போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வினைக் கொடுக்கின்றது.
மேலும் உடலில் பித்தம் அதிகமாக இருப்பின் வேப்பம் பூ கஷாயத்தினைக் குடித்தல் வேண்டும். மேலும் வயதானவர்கள் வேப்பம்பூ கஷாயமானது உடலில் உள்ள கெட்ட கொழுப்பினைக் குறைத்து உடல் எடையினைக் குறைப்பதாக உள்ளது.