Tamil Wealth

ஆப்பிளின்  மருத்துவ குணங்கள் தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க!!

ஆப்பிளின்  மருத்துவ குணங்கள் தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க!!

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரைப் போய் பார்க்க வேண்டிய அவசியமே கிடையாது என்ற பழமொழியை நாம் சிறுவயதில் இருந்தே கேட்டு இருப்போம். அத்தகைய மதிப்புமிக்க சத்துகளைக் கொண்ட அப்பிளின் மருத்துவ குணங்கள் குறித்துப் பார்க்கலாம்.

ஆப்பிளானது வைட்டமின் சி சத்தினைக் கொண்டதாகவும், நார்ச் சத்து போன்றவற்றினைக் கொண்டதாகவும் உள்ளது. பொதுவாக இரும்புச் சத்து உணவுகளை உண்ட பின்னர் வைட்டமின் சி சத்துகள் கொண்ட உணவினை எடுத்துக் கொள்வது சிறப்பானது.

ஏனெனில் அப்போதுதான் இரும்புச் சத்தானது உடலில் முழுமையாக உட்கிரகிக்கப்படும். ஆப்பிளில் உள்ள நார்ச்சத்தானது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைத்து உடல் எடையினைக் குறைக்கச் செய்கிறது.

ஆப்பிளானது மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது, மேலும் இது இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், இரத்த சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மேலும் குழந்தைகளுக்கு தினமும் ஆப்பிள் ஒன்றினைக் கொடுத்துவந்தால், அவர்கள் புத்துணர்ச்சியாக செயல்படுவதோடு ஞாபக சக்தி அதிகரிக்கவும் செய்யவும்.

 

Share this story