தூதுவளை ருசிக்க கிடைக்கும் ஆரோக்கியம்!
Sep 6, 2017, 19:00 IST

- நீல நிற தோற்றத்தை கொண்ட தூதுவளையை பயன்படுத்த சளி தொல்லையால் அவதி படுவோர்களுக்கு நல்ல மருந்து.
சூரியனின் வெப்பத்தினால் உருவாகும் உடல் சூட்டினை தணிக்க தூதுவளையை அரைத்து வெந்நீருடன் கலந்து குடிக்க வேண்டும். - காய்ச்சலால் ஏற்படும் உடல் சோர்வு மற்றும் நாக்கில் ஏற்படும் கசப்பு தன்மையை போக்கும், அடிபட்ட இடங்களில் ஏற்படும் ரத்த கசிவிற்கும் மற்றும் வீக்கத்திற்கு தூதுவளை பயன்படுத்த நல்ல பலனை கொடுக்கும்.
- இதன் சாற்றை அருந்த விரும்பாதவர்கள் அதனுடன் தேன் அல்லது சர்க்கரை போன்ற இனிப்பு சுவை சேர்த்து குடிக்க கண்களில் வரும் நீர் வழிதல் குணம் ஆகும் தன்மை கொண்டது.
- ஆஸ்துமா மற்றும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகள் அனைத்தும் சரி ஆகும் மற்றும் தொடர் இருமல், ஆரோக்கியத்திற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாகவே கொடுக்கும் வல்லமை கொண்டது தான் இந்த மூலிகை தாவரம்.
- இதனை தினம் எடுத்து கொள்ள உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து நம்மை பாதுகாக்கிறது. பல அற்புத பலன்களை கொண்டதே இந்த தூதுவளை.