காலில் ஏற்படும் காயங்களை குண படுத்த வேண்டும்!

காலில் காயம் உள்ளவரின் காலணிகளை வேறொருத்தர் அணிய நோய் தோற்று ஏற்பட்டு அவருக்கும் காலில் கொப்புளங்கள் ஏற்படும்.
மஞ்சளில் இருக்கும் மருத்துவம் காலில் உருவாகும் புண்களை குண படுத்தும் மற்றும் மல்லிகை பூவின் இலைகளை கொண்டு காலில் கொப்பளங்கள் மற்றும் நீர் கட்டுதல் போன்றவை இருக்கும் இடங்களில் தினமும் பயன்படுத்த அசுத்த நீர்கள் வெளியேற்ற பட்டு புண்கள் ஆறி விரைவில் குணம் பெறலாம்.
இரும்பு பொருட்கள் ஏதேனும் ஒன்றினால் காலில் ஏற்படும் காயங்களுக்கு மஞ்சளை பயன்படுத்த நல்ல பலனை கொடுக்கும். இரும்பு பொருட்கள் காலில் அதிக சேதத்தை ஏற்படுத்தும், அதன் மூலம் காலில் அதிக நோய் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
சிறங்கு இருக்கும் இடங்களிலும் மற்றும் இரும்பினால் பாதிப்புக்கு உள்ளான இடங்களிலும் வெள்ளை பூண்டினை அரைத்து பயன்படுத்த காயங்கள் நாளடைவில் குணம் ஆகும்.
காயம் இருக்கும் இடங்களில் தினம் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தவும் நீர் கட்டுதல் போன்றவை தடுக்கப்பட்டு அதில் கொசுக்கள், ஈக்கள் போன்றவை அணுகாமல் பாதுகாத்து கொள்ளும்.