முடியை கவனிக்கவில்லையா? அதிகம் உதிர்கிறதா?
Sep 8, 2017, 11:35 IST

- வெயிலில் சென்று விட்டு திரும்புவோர்கள் தலை வலிக்கிறது என்று கூறுவார்கள் அதற்கு காரணம் தலைக்கு முறைப்படி எண்ணெய் வைத்து இருக்க மாட்டார்கள். அது தலை வலியை ஏற்படுத்தும் மற்றும் முடிகள் வளர்வதையும் தடுக்கும் என்பது அறியாது செய்கிறார்கள்.
- தினம் தலைக்கு எண்ணெய் வைத்தால் பொடுகு தொல்லைகள் வராது முடி உதிர்வுக்கு கட்டுக்குள் வரும்.
- வாரத்திற்கு இரு முறை கண்டிப்பாக ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளிக்க தலையில் இருக்கும் அழுக்குகள் நீங்கி சுத்தம் அடைந்து முடி வளர்ச்சிக்கு உதவும்.
- முடியை பராமரிக்கவில்லை என்றால் ஊட்ட சத்துக்கள் குறைந்து அதிக முடி உதிர்வை காண்பீர்கள். வெங்காயத்தை அரைத்து அதன் சாற்றினை தலைக்கு பயன்டுத்தி ஒரு மணி நேரம் கழித்து குளிக்க, இதனை வாரத்திற்கு இருமுறை செய்ய முடி உதிர்வது தடுக்கப்படும்.
- முடி உதிர்வை சரி செய்ய நல்ல உணவுகளை மேற்கொள்ளுங்கள் மற்றும் முடியை சிறந்த முறையில் கையாளுங்கள்.
- நன்கு எண்ணெய் தேய்த்து பின் குளிக்க சூடு தணிந்து முடி உதிர்வை கட்டுப்படுத்தும். முட்டையின் வெள்ளை கருவையும் பயன்படுத்த நல்ல பலனை கொடுக்கும்.